மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,771 கன அடியில் இருந்து 33,040 கன அடியாக குறைவு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து காணப்பட்டது. இந்த நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 79,682 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 60,771 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 33,040 கன அடியாக குறைந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,771 கன அடியில் இருந்து 33,040 கன அடியாக குறைவு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 89.31 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 51.86 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 60,771 கன அடியில் இருந்து 33,040 கன அடியாக குறைவு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 124.8 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 49.45 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 19.51 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK Alliance

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget