மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது - இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 74 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 85 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 43 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது - இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 57.03 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 22.52 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிய தொடங்கியுள்ளது - இன்றைய நீர் நிலவரம் இதுதான்.

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 85.83 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 13.08 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 78 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 787 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 45.39 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 9.10 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 67 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Sabarivarman Murder : சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
சபரிவர்மன் கொலையில் ட்விஸ்ட்.! நள்ளிரவில் சிறையில் நடந்தது என்ன.? CBCID விசாரணையில் ஷாக் தகவல்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்
புன்னைநல்லூர் கோவில் பூச்சொரிதல் விழா: பெரியகோவிலில் இருந்து ரத ஊர்வலம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
ஓ சகி.. வா சகி.. வந்துடுச்சு புதிய கவாஸகி! Kawasaki Ninja 300 பைக் விலை, தரம் எப்படி?
Skoda Kylaq Rivals: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் வரப்போகும் 3 SUV-விக்கள் - இல்லாத வசதிகளே இல்லை, கைலாக்கிற்கு சவால்
America F35 Jet : அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
அலறிய ட்ரம்ப்.! 3 அதி நவீன எப்35 போர் விமானம் காலி.? அமெரிக்காவை மிரளவைத்ததா ஈரான்- நடந்தது என்ன.?
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
விவசாயிகள் பயிர்க் கடனை உடனே முழுமையாக தள்ளுபடி செய்திடுங்க.! சிஎம் விஜய்க்கு பறந்த இபிஎஸ் அறிக்கை
Embed widget