MIDAS 2022 மாநாடு: ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்ற மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்
மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் மிடாஸ் மாநாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர்.
மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் மிடாஸ் மாநாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய பல் மருத்துவ சங்கத்தின் சென்னை கிளை சார்பில், ஆண்டுதோறும் மிடாஸ் என்ற பெயரில் தமிழ்நாடு மாநில மாணவர்களின் மாநாடு (Tamil Nadu State Students Conference) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் MIDAS 2022 மாநாடு நடத்தப்பட்டது. இதில், மாணவர்களுக்கான அறிவியல் விளையாட்டுகள் மற்றும் கலை, பண்பாட்டு விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன.
அறிவியல் நிகழ்வுகளில் பேப்பர் பிரசன்டேஷன், போஸ்டர் பிரசன்டேஷன், விநாடி- வினா, பல் மருத்துவப் பொருட்களில் இருந்து கலை வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
விளையாட்டுப் போட்டிகளில் எறிபந்து, கோ கோ, கூடைப் பந்து, கை பந்து, பாட்மிண்டன், செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. கலை சார்ந்த போட்டிகள், மேடை மீது, மேடைக்கு வெளியே, ஆன்லைன் என 3 வடிவங்களில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில், 20 பல் மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்றன. இதில், கல்வி மற்றும் கலை, கலாச்சாரப் போட்டிகள் அனைத்திலும் சென்னையை அடுத்து மதுரவாயலில் உள்ள மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனர். விளையாட்டுப் போட்டிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றனர்.
இதன் மூலம் மீனாட்சி அம்மாள் பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாணவர்கள் மிடாஸ் 2022 மாநாட்டில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்று சாதனை படைத்துள்ளனர்.