![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Siddha Dr. Sharmika: சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்ட இந்திய மருத்துவ இயக்குனரகம்..!
சித்த டாக்டர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குனரகம் 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
![Siddha Dr. Sharmika: சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்ட இந்திய மருத்துவ இயக்குனரகம்..! Medical Directorate of India issued a notice to Siddha Dr. Sharmika seeking an explanation within 15 days Siddha Dr. Sharmika: சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்.. விளக்கம் கேட்ட இந்திய மருத்துவ இயக்குனரகம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/09/76b55cee107e631eafab93e96530c33d1673235419743571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சித்த டாக்டர் ஷர்மிகாவிடம் இந்திய மருத்துவ இயக்குனரகம் 15 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இணையத்தில் தனது வீடியோ பதிவுகள் மூலம் ஷர்மிகா தவறான தகவல்களை பரப்புவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டதாக இந்திய மருத்துவ இயக்குனரகம் மற்றும் ஓமியோபதி வாரியம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்திய மருத்துவ ஆணையர் மற்றும் தாளாளர் கொண்ட குழு முன்பு நேரின் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சு:
குழந்தை பிறப்பு, கர்ப்பம், உடல் எடை அதிகரித்தல் போன்றவை குறித்து ஷர்மிகா கூறிய கருத்துகள் சர்ச்சையானது. இதையடுத்து ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். புகாரை அடுத்து ஹர்மிகாவுக்கு நோட்டீஸ் என அனுப்பப்பட்டதாக இந்திய மருத்துவம், ஓமியோபதி வாரியம் இணை இயக்குனரகம் பார்த்திபன் தகவல் தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவர் என்ற பெயரில் வாய்க்கு வந்ததை ஷர்மிகா உளறுவதாக இணையதளத்தில் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள மருத்துவர் ஷர்மிகா, பாஜக நிர்வாகியான டெய்ஸி சரணின் மகள் ஆவார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)