மேலும் அறிய

ஆளுநர் ஆர்.என்.ரவியை அகற்றுங்கள்: மதிமுக கையில் எடுக்கும் கையெழுத்து போராட்டம்!

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்துகிறது.

தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.இரவியை அகற்றக் கோரி மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 29 ஆவது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை அகற்றக் கோரும் கையெழுத்து இயக்கத்தை மறுமலர்ச்சி தி.மு.க. 20.06.2023 அன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடத்துகிறது.

தலைநகர் சென்னையில், தலைமைக் கழகம் அமைந்துள்ள தாயகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.

கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ் அவர்கள் கோவையிலும், கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன் அவர்கள் கடலூரிலும், கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்கள் தென்சென்னையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் காஞ்சிபுரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.கு.மணி அவர்கள் விழுப்புரத்திலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன் அவர்கள் திருநெல்வேலியிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன் அவர்கள் குடந்தையிலும், கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா சேக்முகமது அவர்கள் திருச்சியிலும் கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைக்கிறார்கள்.

கழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டக் கழக செயலாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக நடத்துகிறார்கள்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
விசிக மாநாட்டு மேடையில் திருமாவளவனுக்கு மூச்சுத்திணறல்.. உரையை பாதியிலேயே முடித்தார் திருமாவளவன்!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
மேடை உடைப்பு... தகர ஷீட் கிழிப்பு... உளுந்தூர்பேட்டை விசிக மாநாட்டில் நிலைகுலைந்த பாதுகாப்பு!
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !
அரசு வேலை என கூறி 3.80 லட்சம் பணம்பெற்று போலியான நேர்காணல்.. பெண் அதிகாரியின் கணவர் செய்த தில்லு முல்லு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget