MDMK Election Manifesto: திருச்சியை மேம்படுத்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த மதிமுக.. வெளியான தேர்தல் அறிக்கை..
நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
![MDMK Election Manifesto: திருச்சியை மேம்படுத்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த மதிமுக.. வெளியான தேர்தல் அறிக்கை.. mdmk general secretary vaiko released election manifesto at trichy district today april 6 april 2024 MDMK Election Manifesto: திருச்சியை மேம்படுத்த வாக்குறுதிகளை அள்ளிக்கொடுத்த மதிமுக.. வெளியான தேர்தல் அறிக்கை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/06/ff29275f26c34a610db04e8fcc0ac4ba1712386982068589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.
கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள என அனைவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு கட்சி தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திமுக தேர்தல் அறிக்கை வெளியானது, நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி தரப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக கட்சியின் தேர்தல் அறிக்கையை திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
- முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி திருச்சி பொன்மலை இரயில்பெட்டி தொழிற்சாலை அமைத்திட துணைநின்று குரல் கொடுப்பேன்.
- திருச்சி பெங்களூரு வந்தே பாரத் இரயில் இயக்கிடவும். திருச்சி கொச்சி பகல்நேர விரைவு ரயில் இயக்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த தமிழ்நாடு அரசுடன் இணைந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ் நாட்டின் அடையாளங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தை நலிவில் இருந்து மீட்கவும். இதனை நம்பி திருவெறும்பூர், துவாக்குடி வாழவந்தான் கோட்டை பகுதிகளில் இயங்கும் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- தஞ்சாவூர் - கந்தவர்க்கோட்டை- புதுக்கோட்டை - மதுரை புதிய அகல இரயில்பாதை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருச்சிராப்பள்ளி ஆயூத உற்பத்தி தொழிற்சாலைகளான துப்பாக்கி தொழிற்சாலை (OFT), கனரக உலோக ஊடுருவி தொழிற்சாலை (HEPE)ஆகியவற்றை சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- திருவரங்கத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER). அமைத்திட முயற்சி மேற்கொள்ளப்படும்.
- தஞ்சாவூர் - கந்தவர்க்கோட்டை- புதுக்கோட்டை - மதுரை புதிய அகல இரயில்பாதை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்க, திருச்சி அரியமங்கலம். புதுக்கோட்டை திருவப்பூர்,கருவேப்பிலான் பகுதிகள் உட்பட தேவைப்படும் இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் இரயில்வே மேம்பாலங்கள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
- முந்திரி விளைச்சலுக்குப் பெயர் பெற்ற கந்தர்வக்கோட்டை, ஆதனக் கோட்டை பகுதிகளில் முந்திரி தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்படும். மதிப்புக் கூட்டப்பட்ட முந்திரியாக விவசாயிகளுக்கு கூடுதல் விற்பனை விலை கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
- ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் தேங்கிக் கிடக்கும் நிதியினை திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
- திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பேன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)