மேலும் அறிய

MBBS Doctor Vacancy: மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்பும் தேர்வு: முதல்முறையாக இதில் தேர்ச்சி கட்டாயம்

1021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்பும் தேர்வு முறையில், தேர்வர்கள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

1021 மருத்துவர்கள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முறையில், தேர்வர்கள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

அரசுத்‌ துறைகளில்‌ உள்ள பணியிடங்கள்‌ அனைத்திலும்‌ தமிழக இளைஞர்கள்‌ பெருமளவில்‌ நியமனம்‌ பெற ஏதுவாக, மாநிலத்தின்‌ தெரிவு முகமைகளால்‌ நடத்தப்படும்‌ அனைத்துப்‌ போட்டித்‌ தேர்வுகளிலும்‌ தமிழ்மொழி தகுதித்தாள்‌ கட்டாயமாக்கப்பட்டு ஆணைகள்‌ வெளியிடப்பட்டன. அந்த அரசாணைக்கு ஏற்ப, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, போட்டித்‌ தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித்‌ தாளினை கட்டாயத் தாளாக இணைத்து, அதற்கேற்ப அறிவிக்கைகளை வெளியிட்டு, தகுதியானோரைத் தேர்வு செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌ குரூப் I, II, II-A ஆகிய இரண்டு நிலைகளைக்‌ கொண்ட தேர்வுகளில்‌, முதன்மை எழுத்துத் தேர்வில்‌ கட்டாய தமிழ் மொழித் தாளானது, தகுதி தேர்வாக நடத்தப்படுகிறது. 

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌, நடத்தப்படும்‌  III, IV, VII-B, VIII போன்ற ஒரே நிலை கொண்ட தேர்வுகளில்‌ தமிழ்‌ மொழித் தாளானது, தகுதி மற்றும்‌ மதிப்பீட்டுத்‌ தேர்வாக நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 1,021 உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தற்காலிக அடிப்படையிலேயே மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்பட உள்ளது என்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

அதேபோல 2020ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி வெளியான அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதால், அப்போது விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

நவம்பர் மாதத்தில் இவர்களுக்கான கணினிவழி / எழுத்துத் தேர்வு நடைபெறும். அதற்கு முன்னதாக, தேர்வர்கள் தமிழ் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்று மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

தேர்வு முறை

தமிழ் மொழி தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வு 1 மணி நேரத்துக்கு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் அனைத்துப் பிரினரும் 40 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டியது கட்டாயம். அப்போதுதான் மருத்துவத் தேர்வுக்கான தாள் திருத்தப்படும். 

கணினி வழித் தேர்வு / எழுத்துத் தேர்வு 2 மணி நேரங்களுக்கு நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும் தேர்வில் 35 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும். எஸ்சி/ எஸ்சி அருந்ததியர் / எஸ்டி பிரிவினர் 30 சதவீத மதிப்பெண்களைப் பெற்றால் போதும். 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் http://mrb.tn.gov.in என்ற இணையதளத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
* முகப்புப் பக்கத்தில் Online Registration என்ற தெரிவை க்ளிக் செய்யவும். 
* Assistant Surgeon (General) என்ற பதவியை க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம்.
* மொபைல் எண் மற்றும் இ-மெயில் முகவரி கட்டாயமாகும். அனைத்துத் தகவல்களும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து குறுஞ்செய்தி மற்றும் இ-மெயில் வாயிலாக மட்டுமே பகிரப்படும். * வண்ணப் புகைப்படம் மற்றும் ஸ்கேன் செய்யப்பட்ட கையெழுத்து ஆகியவற்றையும் தேர்வர்கள் பதிவேற்ற வேண்டியது அவசியம். இல்லையெனில் விண்ணப்பம் முழுமை பெற்றதாகக் கருதப்படாது. 

கூடுதல் விவரங்களுக்கு: http://mrb.tn.gov.in 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
Tanush Kotian: அஸ்வினுக்கு பதிலாக இந்திய அணியில் களமிறங்கும் ஆல்-ரவுண்டர்! - யார் இந்த தனுஷ் கோடியன்? 
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
All Pass Cancelled: 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக்! ஃபெயில் ஆனால் அதே வகுப்புதான்! மத்திய அரசின் புது உத்தரவு!
Embed widget