மேலும் அறிய

சீர்காழியா, டெல்லியா? மூச்சுத் திணற வைக்கும் நச்சுப் புகை... அலட்சிய நகராட்சியால் ஆபத்தில் பொதுமக்கள்!

சீர்காழி நகராட்சி உட்பட குப்பைகள் கொட்டப்படும் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதால், நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அலட்சியப்படுத்தப்பட்ட தரம் பிரிப்பு

சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான மட்கும் மற்றும் மட்காத குப்பைகள், அங்குள்ள ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான பிரதான குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. விதிமுறைகளின்படி, தூய்மைப் பணியாளர்கள் மூலம் குப்பைகள் மட்கும் குப்பை, மட்காத குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு, அதற்கென உள்ள பிரத்யேக மையங்களில் மறுசுழற்சி மற்றும் உரமாக்கலுக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

"கடந்த சில மாதங்களாகவே இந்த குப்பை கிடங்கில் குப்பைகளை முறையாக தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறவில்லை. அனைத்து வகையான கழிவுகளும் ஒரே இடத்தில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு வந்தன. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

திடீர் தீ விபத்தும், கொளுந்துவிட்டு எறிந்த புகையும்

இவ்வாறான சூழலில், குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றிக் கொண்டது. கோடை காலத்தின் தாக்கம் மற்றும் காற்றில் இருந்த வறட்சி காரணமாக, தீ மளமளவென குப்பைக் கிடங்கு முழுவதும் பரவியது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ரசாயன பொருட்கள் அதிகம் இருந்ததால், தீயின் தீவிரம் அதிகரித்து, வானுயரத்திற்கு கரும்புகை எழும்பத் தொடங்கியது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் தங்களது தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்களின் நீண்ட நேர போராட்டம்

குப்பைகளின் அடியில் ஏற்பட்ட தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது. ரசாயனக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் உருகி நச்சுப் புகையை வெளியிட்டதால், வீரர்கள் முகமூடி அணிந்து கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் சவால்கள்

தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கூடுதல் தண்ணீர் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தொடர்ந்து போராடியும், குப்பைகளின் உட்பகுதியில் இருந்த நெருப்பை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறினர்.

 தற்போதைய நிலை

தீயின் சுடர்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், புகை தொடர்ந்து வெளியேறிக்கொண்டே இருக்கிறது.

புகைமண்டலத்தில் சிக்கிய ஈசானிய தெருவாசிகள்

இந்த திடீர் தீ விபத்தால், ஈசானிய தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகராட்சிப் பகுதிகள் முழுவதும் அடர்ந்த நச்சுப் புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கை

நகராட்சி நிர்வாகத்தின் தொடர் அலட்சியமே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என அப்பகுதி மக்கள் கொதிப்படைந்துள்ளனர். குப்பைகளை முறையாகத் தரம் பிரித்து, உடனுக்குடன் அப்புறப்படுத்தியிருந்தால் இந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர் கூறுகையில், "இந்த குப்பை கிடங்கால் எங்களுக்கு நீண்ட நாட்களாகவே சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்தால் ஒட்டுமொத்த பகுதியும் நச்சுக்காடாக மாறியுள்ளது. குழந்தைகள் மூச்சு விட முடியாமல் தவிக்கிறார்கள். நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த குப்பைக் கிடங்கை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், அல்லது நவீன முறையில் குப்பைகளை அழிக்க வேண்டும்" என்றார்.

நகராட்சி நிர்வாகத்தின் அவசர நடவடிக்கை தேவை

சீர்காழி நகராட்சி நிர்வாகம் இந்த விவகாரத்தில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும் புகைமண்டலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக அவசர மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் குப்பைகளை 100% தரம் பிரிப்பதை நகராட்சி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குப்பை கிடங்குகளில் மீண்டும் தீ விபத்து ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு மற்றும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த குப்பை கிடங்கு விவகாரத்திற்கு, மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே சீர்காழிமக்களின் தற்போதைய கோரிக்கையாக எழுந்துள்ளது 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

" உன் மனைவியை என்னுடன் அனுப்பிடு " வீட்டிற்கே சென்று கணவரிடம் கூச்சலிட்ட நபர்
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
வீட்டுக்கு வந்த தோழி !! காணாமல் போன 20 பவுன் நகை !! அம்பலமான பின்னணி
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Russia Ukraine War: அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
அடப்பாவமே.! உக்ரைனில் 4 இந்தியர்கள் பலி; கப்பல் மீதான ரஷ்ய க்ரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு MEA கண்டனம்
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Embed widget