மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (29.01.2026): மயிலாடுதுறை: நாளை மின் தடை! உங்க ஏரியா இருக்கா? தெரிஞ்சிக்கோங்க..!

Mayiladuthurai Power Shutdown 29.01.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (29.01.2026) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மணக்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, துணை மின் நிலையத்தில் 29.01.2026 நாளைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் ம.விஜயபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு பணிகளின் அவசியம்

மின் விநியோகக் கட்டமைப்பு சீராக இயங்குவதற்கும், எதிர்பாராத மின்தடைகளைத் தவிர்ப்பதற்கும் ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பணியின் போது, பழுதடைந்த மின் கம்பிகள் மாற்றுதல், மின்மாற்றிகளில் (Transformers) எண்ணெய் அளவை சரிபார்த்தல், மின் பாதைகளில் உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் சேதமடைந்த இன்சுலேட்டர்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறும். இப்பணிகள் காரணமாக மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

நாளை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மணக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்படும்.

* சோழசக்கரநல்லூர்

* சேமங்கலம் 

* ஆலவேலி

* நத்தம் 

* வேப்பங்குளம்

 * சாவடி

 * உளுத்துக்குப்பை

 * மொழையூர்

 * ஆனதாண்டவபுரம்

 * மணக்குடி

 * கீழிருப்பு

 * மாப்படுகை

இந்த இடங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற மின் இணைப்புகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

எட்டு மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளான குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மின் மோட்டார்கள் மூலம் நீர் ஏற்றுபவர்கள் மற்றும் சிறு குறு தொழிலாளர்கள் காலையிலேயே பணிகளை முடித்துக்கொள்ள மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், நிர்வாகக் காரணங்களுக்காகவோ அல்லது காலநிலையிலோ மாற்றம் ஏற்பட்டால், இந்த மின் நிறுத்தத் தேதியில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இப்பராமரிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சை நகரில் மட்டும் 430 பேர் மீது வழக்குப்பதிவு... போலீசார் அதிரடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
தஞ்சை நகரில் மட்டும் 430 பேர் மீது வழக்குப்பதிவு... போலீசார் அதிரடி: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி... பட்ஜெட் குறித்து திருமாவளவன் சொன்னது என்ன?
சமூக நீதித்துறைக்கு கூடுதல் நிதி... பட்ஜெட் குறித்து திருமாவளவன் சொன்னது என்ன?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?
வளர்பிறையில் உயரும்... தேய்பிறையில் குறையும் அதிசய கிணறு: எங்கு உள்ளது தெரியுங்களா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget