Mayiladuthurai Power Shutdown (03.01.2026) : ஸ்தம்பிக்கும் மயிலாடுதுறை மாவட்டம் - நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் நாளை மின்தடை...!
Mayiladuthurai Power Shutdown 03.01.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளைய தினம் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், ஜனவரி 3, 2026 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர்கள் தனித்தனியே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
பராமரிப்பு பணி
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
பொதுமக்களின் வசதிக்காகவும், தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்படும் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகளால் பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்கள் பின்வருமாறு.
மின்தடை நேரம்
அனைத்துப் பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
ஆச்சாள்புரம் மற்றும் அரசூர் துணை மின் நிலையங்கள்
* ஆச்சாள்புரம்
* அரசூர்
* மாங்கனம்பட்டு
* தைக்கால்
* கொள்ளிடம்
* ஆணைக்காரன்சத்திரம்
* நல்லூர்,
* நாதல்படுகை
* மகேந்திரப்பள்ளி
* சரஸ்வதிவிளாகம்
* அளக்குடி
* புளியந்துறை
* பழையார்
* புதுப்பட்டினம்
* மாதானம்
* பழையபாளையம்
* பச்சைபெருமாநல்லூர்
* சீயாளம்
* தாண்டவன்குளம்
* மடவாமேடு
* புத்தூர்
* எருக்கூர்
* மாதிரிவேளூர்
* வடரங்கம்
* அகணி
* குன்னம்
மயிலாடுதுறை நகர் பேச்சாவடி துணை மின் நிலையம்
* பட்டமங்கலத் தெரு
* ஜி.எச். ரோடு
* திருவாரூர் ரோடு
* கோர்ட் சாலை
* மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
* மூவலூர்
* சித்தர்க்காடு
* அரையபுரம்
* மறையூர்
* கூறைநாடு
* மகாதானத் தெரு
* பெரிய கடைத்தெரு
* பூம்புகார் ரோடு
* தருமபுரம் மெயின் ரோடு
* தரங்கை சாலை
* வழுவூர்
* எலந்தங்குடி
* கப்பூர்
* வடகரை
* அன்னவாசல்
* இளையனூர்
* அரங்ககுடி
* செருதியூர்
* குளிச்சார்
* மன்னன்பந்தல்
* மங்கநல்லூர்
பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்கள்
* பாலையூர்
* மேக்கிரிமங்கலம்
* பருத்திக்குடி
* காரனூர்
* நக்கம்பாடி
* மாந்தை
* கங்காதராபுரம்
* தேரழந்தூர்
* கோமல்
* கள்ளிக்காடு
* பெரட்டக்குடி
* கந்தமங்கலம்
* வடமட்டம்
* காஞ்சிவாய்
* கோனேரிராஜபுரம்
* பழையகூடலூர்
* கொக்கூர்
* திருவாலங்காடு
* திருவாவடுதுறை
* பேராவூர்
மணக்குடி துணை மின் நிலையம்
* சேமங்கலம்
* ஆலவேலி
* நத்தம்
* வேப்பங்குளம்
* சாவடி
* உளுத்துக்குப்பை
* மொளையூர்
* ஆனதாண்டவபுரம்
* மணக்குடி
* கீழிருப்பு
* மாப்படுகை
மின்வாரியத்தின் முக்கிய குறிப்பு
இந்த பராமரிப்புப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடையும் பட்சத்தில், மின் விநியோகம் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், நிர்வாக காரணங்கள் அல்லது அவசரத் தேவைகள் ஏற்பட்டால் மின்தடை செய்யப்படும் தேதியில் மாற்றங்கள் செய்யப்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர் தங்களது தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் (பொறியாளர் அப்துல் வஹாப் மரக்காயர், பொறியாளர் மூர்த்தி, பொறியாளர் விஜயபாரதி மற்றும் பொறியாளர் ரேணுகா) கேட்டுக்கொண்டுள்ளனர்.






















