மேலும் அறிய

மயிலாடுதுறை: "ஆழ்துளை கிணறு இருக்கு... ஆனா மின்சாரம் இல்ல!" - ஆட்சியரிடம் விவசாயிகள் ஆதங்கம்..

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து விவசாயிகள் ஆவேசமாக முறையிட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்து விவசாயிகள் ஆவேசமாக முறையிட்டனர். குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படாததால் 140 விவசாயிகள் கடும் கடன் சுமையில் சிக்கியிருப்பது மற்றும் பயிர் சேதம் குறித்த புகார்கள் கூட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

மின்சாரம் இல்லாத ஆழ்துளை கிணறுகள்: வட்டி கட்ட முடியாமல் விவசாயிகள் தவிப்பு

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் முன்வைத்த மிக முக்கியமான குற்றச்சாட்டு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம் வழங்கப்பட்ட கடன் திட்டத்தைப் பற்றியதாகும்.

கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில், TABCEDCO மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்க கடன் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 140 விவசாயிகள் கடன் பெற்று தங்கள் நிலங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்தனர்.

விவசாயிகளின் குமுறல்

"அரசு கொடுத்த கடனை நம்பி ஆழ்துளை கிணறு தோண்டினோம். ஆனால், கிணறு வெட்டி மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை அதற்கான விலையில்லா மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை. மோட்டார் இயக்க முடியாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. பயிர் விளையாத நிலையில், வாங்கிய கடனுக்கு மாதந்தோறும் வங்கி வட்டி மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. இது எங்களை தற்கொலை விளிம்பிற்கு தள்ளியுள்ளது," என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

புகையான் நோய் தாக்குதல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக நெற்பயிர்களில் புகையான் நோய் மற்றும் பல்வேறு பூச்சித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கூட்டத்தின் ஒரு பகுதியாக, விவசாயி ஒருவர் தான் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்கி கருகிய நிலையில் இருந்த செடிகளை கையில் ஏந்தி வந்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்திடம் காண்பித்தார். "கண்ணும் கருத்துமாக வளர்த்த பயிர்கள் கண்முன்னே கருகிப் போகின்றன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது நோய் தடுப்பு நடவடிக்கைகளை வேளாண் துறை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் கோரிக்கை விடுத்தது கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மணல் குவாரிகளால் அதலபாதாளத்திற்கு சென்ற நிலத்தடி நீர்

மாவட்டத்தில் ஆங்காங்கே செயல்பட்டு வரும் தனியார் மணல் குவாரிகள் குறித்தும் விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், இதனால் கோடை காலங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். மணல் கொள்ளையைத் தடுக்காவிட்டால் மயிலாடுதுறை மாவட்டத்தின் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

போலி மருந்துகள் மற்றும் உரக்கடை சோதனைகள்

உரக்கடைகளில் தரமற்ற மற்றும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக மற்றொரு புகார் எழுந்தது. அதிக விலைக்கு மருந்துகளை விற்பதுடன், காலாவதியான மருந்துகளை விவசாயிகளுக்குத் தள்ளிவிடுவதாகக் கூறிய விவசாயிகள், வேளாண் துறை அதிகாரிகள் உரக்கடைகளில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு போலி மருந்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நிச்சயமற்ற எதிர்காலம்

அரசின் திட்டங்கள் காகித அளவில் மட்டுமே இருப்பதாகவும், களத்தில் தங்களுக்குத் துயரமே மிஞ்சுவதாகவும் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்தகட்டமாகப் பெரும் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் விவசாயச் சங்கங்கள் எச்சரித்துள்ளன.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
ரூ.5 லட்சம் வாங்கிட்டு டாக்டர் ஆனதும் பல்டி !! அக்கா மகளுக்கு ஆபாசப் படம் அனுப்பிய டாக்டர்
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
செங்கல்பட்டு மக்களுக்கு செம குட் நியூஸ்! செய்யூரில் உருவாகும் பிரம்மாண்ட தீம் பார்க் & ரிசார்ட்ஸ்!
செங்கல்பட்டு மக்களுக்கு செம குட் நியூஸ்! செய்யூரில் உருவாகும் பிரம்மாண்ட தீம் பார்க் & ரிசார்ட்ஸ்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
இன்னோவை இடித்து தள்ளிய 7 சீட்டர் பெஸ்ட் செல்லர் MPV; ஜூனில் அமோக விற்பனை- எந்த கார் தெரியுமா?
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
Monsoon Bills: பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
பிறப்பு & இறப்பு To தொகுதி மறுவரையறை..! 5 புதிய மசோதாக்கள் - மழைக்கால கூட்டத்தொடர் ப்ளான்
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
அதிக மைலேஜ் கிடைக்கணுமா? பெட்ரோலை நிரப்ப பெஸ்ட் டைம் எது? அறிவியல் உண்மைகள்!
Embed widget