நர்ஸிங் மாணவி சரஸ்வதி கொலை: அதிகபட்ச தண்டனைகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை..

உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கொலைக்கு ஆளான சரஸ்வதி குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேவியானந்தல் கிராமம் பூவத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரமணி அவருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இதில் அவரது மூத்த மகள் சரஸ்வதி (18) டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். சரஸ்வதியும் அதே ஊரைச் சேர்ந்த ரங்கா (எ) ரங்கசாமி (21) என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.


இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதனாலும், அவர்களது காதல் விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததாலும், சரஸ்வதிக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி அதிகாலை சரஸ்வதி அவரது வீட்டின் பின்புறம் மர்மமான முறையில் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்துத் திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.சரஸ்வதியின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.


சரஸ்வதியைக் கொலைசெய்த குற்றவாளியைப் போலீசார் தேடிவந்த நிலையில் அவரைக் காதலித்து வந்த ரங்கசாமி தலைமறைவானார். இதையடுத்து போலீஸாரின் சந்தேகம் ரங்கசாமியின் பக்கம் திரும்பியது. நீண்ட விசாரணைக்குப் பின்னர் அவர் ஆந்திரமாநில எல்லையில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த ரங்கசாமி, அவரது நண்பர் ரவீந்திரன் (23) மற்றும்  ரங்கசாமியின் தம்பி ஆகிய 3 பேரையும் கைது விசாரணை நடத்தினர். அதில் சரஸ்வதியை கொலை செய்ததை ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.


போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு தனது வீட்டின் பின்புறம் ரங்கசாமியைச் சந்தித்த சரஸ்வதி தனக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளதால் தன்னை மறந்துவிடும்படி கூறியுள்ளார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த ரங்கசாமி துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலைசெய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதற்கு ரங்கசாமியின் நண்பர் ரவீந்திரன் மற்றும் அவரது தம்பி ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரின் மீதும் கொலை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமி மற்றும் அவரது நண்பர் ரவீந்திரனை கூடலூர் மத்திய சிறையிலும், ரங்கசாமியின் தம்பியை சிறார் சீர்திருத்தப்பள்ளியிலும் அடைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நர்ஸிங் மாணவி சரஸ்வதி கொலை: அதிகபட்ச தண்டனைகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை..நர்ஸிங் மாணவி சரஸ்வதி கொலை: அதிகபட்ச தண்டனைகோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை..


இது தொடர்பாக ABPநாடு செய்தி நெட்வொர்க், இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மற்றும் திருநாவலூர் காவல் ஆய்வாளர்  சீனிவாசனை தொடர்புகொண்டபோது , ”குற்றவாளிகள் மூவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பிப்பதற்கு  முன்பு, அந்த பெண்ணின் 2 கிராம் கம்மலை பறித்து அடகுவைத்து அந்தப் பணத்தில் இங்கு இருந்து ஆந்திராவுக்கு தப்பி சென்றுள்ளனர். குற்றவாளி ரங்கசாமியின் செல்ஃபோன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துக் கைது செய்துள்ளனர்.  ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 294(b) , 302 , 201 மற்றும் 404 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , உளுந்தூர்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்கடுத்து இரவு கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.


மேலும் முக்கிய குற்றவாளியான ரங்கசாமி, அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிவந்தவர் எனவும், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்ப்பேட்டை அதிமுக வேட்பாளருக்காகத் தீவிரமாகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.


இதற்கிடையே கொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, “கொலையாளிக்கு அதிகபட்ச தண்டனை தரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்கவேண்டும். அந்த வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளது.

Tags: aiadmk CPM murder kallakurichi ulundurpettai Love

தொடர்புடைய செய்திகள்

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Shankar Jiwal on Madhan : யூ ட்யூபர் மதன் மீது நிச்சயம் நடவடிக்கை - சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

கரூர் : குறைந்துவரும் கொரோனா தொற்று எண்ணிக்கை : இருவர் உயிரிழப்பு..!

கரூர் : குறைந்துவரும் கொரோனா தொற்று எண்ணிக்கை : இருவர் உயிரிழப்பு..!

TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 15,000-க்கு கீழ் கொரோனா தொற்று..!

TN Corona Update: தமிழ்நாட்டில் இன்று 15,000-க்கு கீழ் கொரோனா தொற்று..!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

மூட நம்பிக்கையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட பின்புலம் என்ன?

டாப் நியூஸ்

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

ArrestMadanOP in Social Media : ட்ரெண்டாகும் #ArrestMadhanOP - மதனை கைது செய்யுங்கள்!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

PUBG Madan Accused : சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகள், அத்துமீறல் : குற்றவரிசையில் கொடூர ஆன்லைன் கேமர் மதன்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

”அம்மாவாக இருங்கள்” - பட்டதாரி பெண்ணின் கடிதத்தால் நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!