Manobala funeral : நடிகர் மனோபாலா மறைந்தார்.. திரை பிரபலங்கள் இரங்கல்... இறுதி சடங்கு எங்கே நடக்கிறது?
இயக்குனர் மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் நாளை காலை தகனம் செய்யப்படுகிறது.
இயக்குனர் மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின் மயானத்தில் நாளை காலை தகனம் செய்யப்படுகிறது.
இயக்குனரும், நடிகருமான மனோபாலா கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டில் காலமானார். அவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில் திரை கலைஞர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகர் ரஜினி இரங்கல்
அருமை நண்பர் மனோபாலாவின் இறப்பு தனக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது என்றும் ,அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்; அவரின் ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா
மனோபாலா இறந்ததை கேட்டு ஆழ்ந்த துயரமடைந்ததாக இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்
இயக்குனர் பாரதிராஜா இரங்கல்
”எனது மாணவன் மனோபாலா மறைவு எனக்கும் தமிழ் திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்”
நடிகர் கருணாஸ் இரங்கல்
மனோபாலா நல்ல குணம் உடையவர்; அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என தெரிவித்துள்ளார்
நடிகர் மதன்பாப் இரங்கல்
அருமையான மனிதர் அவரது மறைவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இயக்குனர் விக்ரமன்
”உதவி இயக்குனர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யக்கூடியவர் மனோ பாலா”
தயாரிப்பாளர் டி.சிவா
இனிமையான மனிதர் எல்லோருக்கும் பிடித்தமான மனிதர் மனோ பாலா
நடிகர் சரத்குமார்
”தமிழ் திரையுலகில் தனி அடையாளத்தை நிரூபித்து ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளார் மனோபாலா”
நடிகர் சசிகுமார்
”மனோபாலா அனைவருடனும் கலகலப்புடன் பழகும் குணம் கொண்டவர்”
பன்முகத்தன்மை கொண்டவர் மனோபாலா
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 திரைப்படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வந்த இவர் தனது யூ ட்யூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 15 நாட்களாக கல்லீரல் பிரச்சனைக்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்.
மேலும் படிக்க
RK Suresh: ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கு.. சிக்கிய ஆர்.கே.சுரேஷின் வங்கிக்கணக்குகள் முடக்கம்..!