மேலும் அறிய

Makkal Needhi Maiam Vote share 2021 | திராவிடக் கட்சிகளின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறிக்கிறதா?

தமிழ்நாட்டின் மிக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, மக்கள் நீதி மய்யம். 2018-இல் மதுரையில் அவர் கட்சியை தொடங்கியதற்கு முன்பே ட்விட்டரின் 140 கேரக்டர்களில் அடங்கிவிடாத அவரது ட்வீட்களில் அவரது தேர்தல் அரசியல் பயணம் தொடங்கியிருந்தது.

‘கடவுள் இல்லைனு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்லறேன்’
– அன்பே சிவம்(2003)

 நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தை அவரின் இந்த ஒரு வசனத்துக்குள் அடக்கிவிடலாம். தமிழ்நாட்டின் மிக சமீபத்திய கட்சி மக்கள் நீதி மய்யம். 2018-ல் மதுரையில் அவர் கட்சியை தொடங்கியதற்கு முன்பே ட்விட்டரின் 140 கேரக்டர்களில் அடங்கிவிடாத அவரது ட்வீட்களில் அவரது தேர்தல் அரசியல் பயணம் தொடங்கியிருந்தது. தமிழ்நாட்டு அரசியலில் நிலவும் ஊழல், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான அவரது ட்வீட்கள் பாமரர்களுக்குப் புரியாது என்றாலும் ’நெருப்புடா’ ரகங்களாகவே இருந்தன. 2017-இல் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அரசியல் பிரவேசத்தைக் கவிதை வரிகளில் சூசகமாக அறிவித்தார். நடிகர் ரஜினி போல இவரும் இறுதிவரை இழுத்தடிப்பார் என எல்லோரும் எண்ணிவந்த நிலையில் 2018-இல் அவரது டார்ச்லைட் ஏந்திய ‘மய்ய’ அரசியல் தொடங்கியது.

Makkal Needhi Maiam Vote share 2021 | திராவிடக் கட்சிகளின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறிக்கிறதா?

அரசியல் விமர்சகர்கள் அவரது அரசியல் பிரவேசத்தை, நடிகர் சிவாஜியின் அரசியல் பிரவேசத்துடன் ஒப்பிட்டார்கள். சிலர் அவர் திராவிடப் பற்றாளர் என்றார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிக் கட்சிகளோ அவரை பாரதிய ஜனதா கட்சி ஏவிவிட்ட ட்ராஜன் குதிரையாகப் பார்த்தது.  காரணம் அவர் முன்வைத்த கருத்துகளும் அவரது செயல்பாடுகள் அத்தனையுமே மேலே சொன்னது போல ’இருக்கு-இல்லை’ ரகமாகவே இன்றளவும் தொடர்கிறது.

இடஒதுக்கீடு குறித்த தெளிவான முடிவை இன்றளவும் அவரது கட்சி எட்டவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை சமயத்தில் அவரது கட்சியின் வேட்பாளர் அளித்த பேட்டியில் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசவும் கட்சியின் தலைவர் கமல்ஹாசனோ அந்தக் கருத்துக்கு மௌனம் காத்தார். அதிமுக தேர்தல் அறிக்கையில் வன்னியர் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டு அறிவிப்பு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குத் தன்னுடன் மேடையில் அமர்ந்திருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவிடம் மைக்கைக் கொடுத்தார். அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா விவகாரத்தில் அவர் அரசுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுத்தது தீவிர விமர்சனத்தைச் சந்தித்தது. தமிழ்நாட்டுக் கட்சிகள் அனைத்துமே மத்திய அரசின் நீட் தேர்வை எதிர்க்கும்போது அதற்கு மாற்றாக ‘சீட்’ தேர்வுகள் கொண்டுவரப்படும் எனத் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். திராவிடக் கட்சிகளுடனான கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என அறிவித்தவர் தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இருக்குமா என்ற தொலைக்காட்சி நெறியாளர் ஒருவரின் கேள்விக்கு இன்றளவும் கமல் பதிலளிக்கவில்லை. பிரதமர் மோடி மீது இன்றளவும் அவர் விமர்சனம் வைப்பதில்லை என்கிற கருத்தும் சமூகவலைத்தளங்களில் பரவலாக நிலவிவருகிறது. இன்னும் சொல்லப்போனால் பாரதிய ஜனதா கட்சியின் தூய்மை இந்தியா திட்டத்துக்கான தமிழ்நாட்டின் தூதுவராகவும் கட்சியைத் தொடங்குவதற்குச் சிலகாலம் முன்புவரை கமல் செயல்பட்டு வந்தார்.  

Makkal Needhi Maiam Vote share 2021 | திராவிடக் கட்சிகளின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறிக்கிறதா?
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவைச் நேரடியாகச் சந்தித்துப் பேசிய அதே கமல்தான் பின்னாட்களில் இஸ்லாமிய மதவெறுப்பைத் திணிக்கும் விஸ்வரூபம் படத்தை உருவாக்கினார் என்று விமர்சனங்கள் எழுந்தன. தன்னைக் காந்தியவாதி எனச் சொல்லிக் கொள்பவர் ஆர்.எஸ்.எஸ். காந்தியைச் சுட்டுக் கொன்றதையும் அதன் இந்துத்துவக் கொள்கையையும் ‘ஹே ராம்’ படத்தின் மூலம் பகுத்தறிவுப் பார்வையில் அணுகினார் எனவும் விமர்சிக்கப்பட்டது. தனது பார்வையிலேயே இத்தனை முரண்படும் கமல்ஹாசனிடம் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் எல்லாம் கேட்பது ஒன்றேயொன்றுதான் ‘கட்சியின் கொள்கை என்ன?’ அதற்கும்  அவர் இருக்கு-இல்லை ரகமாகவே ‘சொன்னால் காப்பியடித்துவிடுவார்கள்’ என்றார்.

ஆனால் இதே மக்கள் நீதிமய்யம்தான் 2021 தேர்தலில் திராவிடக் கட்சிகளின் வாக்குவங்கியைப் பிரிக்கும் எனச் சொல்லப்படுகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கட்சியின் ஒட்டுமொத்த வாக்குச் சதவிகிதம் 3.7. அதைவிட 5 சதவிகிதம் கூடுதலாகச் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பெறும் எனக் கணித்திருக்கிறார் தமிழ்நாடு அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி.

Makkal Needhi Maiam Vote share 2021 | திராவிடக் கட்சிகளின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறிக்கிறதா?

அவர் குறிவைப்பது அத்தனையும் அவர் முகத்தை நன்கு அறிந்த நகர்ப்புறத் தொகுதிகள்தான். தொழிற்துறை மயமாக்கப்பட்ட கோவையின் பத்து தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்.கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

ஆனால் எம்.ஜி.ஆர். என்கிற அடையாளத்தைக் கொண்டு அ.தி.மு.க. தமிழ்நாட்டில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக் கொண்டதுபோலத்தான் கமல்ஹாசன் என்கிற ஒற்றை அடையாளத்தைப் பற்றிக்கொண்டு மக்கள் நீதி மய்யம் அரசியலில் மெல்ல நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு கிராமப்புற மக்களிடம் இருந்த செல்வாக்கு கமல்ஹாசனுக்குக் கிடையாது. பாரிவேந்தரின் ஐ.ஜே.கே மற்றும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்துச் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கினாலும் கிராமப்புற வாக்குகள் என்பது அவருக்குத் தற்போது சாத்தியமற்றது.

அவர் குறிவைப்பது அத்தனையும் அவர் முகத்தை நன்கு அறிந்த நகர்ப்புறத் தொகுதிகள்தான். தொழிற்துறை மயமாக்கப்பட்ட கோவையின் பத்து தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்.கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.அங்கே பார்ப்பனர்கள் மற்றும் கவுண்டர் சமூகத்து வாக்கு வங்கி அதிகம். அதனால் அது கமல்ஹாசனுக்குத் தோதான தொகுதியும் கூட என்கிறார்கள் கட்சியின் உறுப்பினர்கள்.  வாய்ப்பாக அவர் களமிறங்கியிருக்கும் தொகுதியில் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளுமே போட்டியிடாமல் தங்களது கூட்டணிக் கட்சியைக் களமிறக்கியுள்ளன. காங்கிரஸின் சார்பில் மயூரா ஜெயக்குமாரும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வானதி ஸ்ரீனிவாசனும், அமமுக சார்பில் துரைசாமியும் அந்தத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

Makkal Needhi Maiam Vote share 2021 | திராவிடக் கட்சிகளின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறிக்கிறதா?

இதுதவிர 2019 தேர்தலிலும் கோவை தெற்குப் பகுதியில் பாரதிய ஜனதாவின் வாக்கு வங்கியை மநீம பிரித்தது இங்கே பதிவு செய்யவேண்டியது. அப்போது மநீமவின் சார்பில் களமிறக்கப்பட்ட கோவை தொழிலதிபர் மருத்துவர் மகேந்திரன் பாரதிய ஜனதாவின் சிபி ராதாகிருஷ்ணனுடைய வாக்குகளைப் பிரித்தார். அதே மகேந்திரன் தற்போது சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இது தவிர நகர்புறத் தொகுதிகளான கோவையிலும் சென்னையிலும் பல்வேறு சூழலியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் என்.ஜி.ஓக்கள், சமூக இயக்கங்களுடன் கைகோர்த்துள்ளது மய்யம். இவர்களில் சிலரை வேட்பாளர்களாகவும் களமிறக்கியுள்ளது. சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சிவ இளங்கோ, செந்தில் ஆறுமுகம் மற்றும் டிக்டாக் புகழ் சூழலியல் ஆர்வலர் பத்மபிரியா இதற்கான உதாரணம்.இதுதவிர களத்தில் இறங்கிப் பணியாற்றும் சிறுசிறு என்.ஜி.ஓ.க்களுடனும்  மநீம கைகோத்துள்ளது. இப்படியான காய் நகர்த்தல்கள் அத்தனையும் மய்யத்துக்கான ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்டது போல கணிசமான வாக்குச் சதவிகிதத்தைப் பெற்றுத்தரும்.

Makkal Needhi Maiam Vote share 2021 | திராவிடக் கட்சிகளின் வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பறிக்கிறதா?
ஆனால் அது திராவிடக் கட்சிகளின் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குவங்கியை ஆட்டம்காணச் செய்யும் அளவுக்கு இருக்குமா?   

இதுவரையிலான சட்டப்பேரவை வரலாற்றில் அதிமுக கூட்டணி மீதான அதிருப்தி வாக்குகள் திமுக கூட்டணிக்குத்தான் கிடைத்து வந்தன. ஒருதிராவிடக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிடக் கட்சியையே மக்கள் ஆட்சியில் அமர்த்தி வந்தார்கள். நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இளைஞர்களிடையே சென்றுசேர பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொண்டாலும் நடப்புநிலையுடனான அவர்களது முரண்பாடு காரணமாக அவர்களால் இந்த திராவிட வாக்குவங்கியை பிரிக்கமுடியவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, என அடுத்தடுத்த கட்சிகள் 2019ல் திராவிடக் கட்சிகளுக்கு எதிராகக் களமிறங்கியபோது சுமார் 23 தொகுதிகளில் இந்தக் கட்சிகள் வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தைவிட அதிக வாக்குகள் பெற்றிருந்தன. இது தி.மு.க.வுக்கு மட்டுமல்லாமல் அ.தி.மு.க-வுக்கும் வார்னிங்காக அமைந்தது.

தமிழ்நாடு தேர்தல் வரலாற்றில் மூன்றாவது அணி வாக்குவங்கியைப் பிரிப்பது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. ஆனால் ’நாங்கள் மூன்றாவது அணியல்ல நாங்கள்தான் முதல் அணி’ என்கிறார் கமல். ஆனால் சமூகநீதியில் வேரூன்றி உருவான மாநிலத்தில் இந்த மழுப்பலான மய்யப் பயணத்தால் எண்ணிய இலக்கை எட்டமுடியுமா? மே 2-ஆம் தேதி தெரியவரும்.        

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget