மேலும் அறிய

Maha Shivaratri 2024 : பக்தனுக்காக எமனை எதிர்த்த சிவன்.. சிரஞ்சீவியாய் வாழ காஞ்சி கோவில் சிறப்புகள்..

Maha Shivaratri 2024 , இறவாதீஸ்வரர் கோயில் ( அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில் ) குறித்து பார்க்கலாம் .

கோயில் நகரம் காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கைத்தறி பட்டுக்கு பிரபலமாக இருந்தாலும், காஞ்சிபுரத்திற்கு மற்றொரு பெயர் கோயில் நகரம் என்றே சொல்வார்கள். ஏனென்றால் காஞ்சிபுரம் முழுவதும் கோயில்கள் நிறைந்த ஊராக உள்ளது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், காஞ்சிபுரம் மாநகரத்தை கோயில்களில் வைத்து இரண்டு பகுதிகளாக பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் ஒன்று சிவகாஞ்சி  மற்றொன்று விஷ்ணு காஞ்சி. சிவன் கோயில்கள் அதிகம் இருக்கும் இடங்கள்   சிவ காஞ்சி (பெரிய காஞ்சிபுரம் ) என்றும், திருமால் கோயில்கள் அதிகம் உள்ள  பகுதியை, விஷ்ணு காஞ்சி ( சின்ன காஞ்சிபுரம் )  என்று அழைத்து வருகின்றனர் .

Maha Shivaratri 2024 : பக்தனுக்காக எமனை எதிர்த்த சிவன்.. சிரஞ்சீவியாய் வாழ  காஞ்சி கோவில் சிறப்புகள்..

முக்தி தரும் ஏழு நகரங்கள்

அயோத்தி, மதுரா, அரித்துவார், வாரணாசி ,காஞ்சிபுரம், உஜ்ஜைன், துவாரகை  ஆகிய ஏழு நகரங்களும் முக்தி தரும்  நகரமாக இந்து  மக்களால் நம்பப்படுகிறது.  அந்த வகையில் அவற்றில் காஞ்சிபுரம்  நகரமும் ஒன்று என்பதால்,  காஞ்சிபுரத்திற்கு கூடுதல் சிறப்பு உள்ளது.

மகா சிவராத்திரி ( Maha Shivaratri 2024 )

மாசி மாதம் வரும் சதுர்த்தசி திதியில் வரும் தேய்ப்பிறையே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, இப்போது முதலே சிவாலயங்களிலும் சிவ பக்தர்களும் மகா சிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.Maha Shivaratri 2024 : பக்தனுக்காக எமனை எதிர்த்த சிவன்.. சிரஞ்சீவியாய் வாழ  காஞ்சி கோவில் சிறப்புகள்..

இந்த நன்னாளில் சிவாலயங்களுக்கு சென்று சிவனை வணங்கி பூஜித்தால் வாழ்வில் ஏராளமான நன்மைகள் நடக்கும் என்பது ஐதீகம் ஆகும். சிறப்பு வாய்ந்த மகா சிவராத்திரியில். கோவிலுக்கு சிறப்பு மிக்க காஞ்சிபுரம் நகரத்தில், நீங்கள் பார்க்கவேண்டிய முக்கிய கோயில்கள் குறித்து பார்த்து வருகிறோம்.  அந்த வகையில் , இறவாதீஸ்வரர் கோயில் ( அருள்மிகு ஸ்ரீ ம்ருத்திஞ்ஜயேஸ்வரர் கோயில் ) குறித்து பார்க்கலாம் .

காஞ்சிபுரம் இறவாதீசுவரர் கோயில் (இறவாத்தானம்) 

நகரங்களில் சிறந்த பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்தில், பல்லவர் கால கற்றளியாக இறவாதீஸ்வரம் விளங்குகின்றது. சுவர்களின் தூண்களைப் போன்று நின்ற நிலையில் பெரிய யாளி உருவம் காட்டப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள குடைவரைகளில் யாளிகளின் தலைமேல் தூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்லவ மன்னன் ராஜசிம்மனால் கட்டுவிக்கப்பட்டது.

Maha Shivaratri 2024 : பக்தனுக்காக எமனை எதிர்த்த சிவன்.. சிரஞ்சீவியாய் வாழ  காஞ்சி கோவில் சிறப்புகள்..

பல்லவர்களுக்கே உரித்தான சோமாஸ்கந்தர் கருவறை, குஞ்சித கரண தாண்டவம், ஜலந்தரஸம்ஹர மூர்த்தி,கால ஸம்ஹர மூர்த்தி , கங்காதர மூர்த்தி, பிச்சாடனர் , அழகிய கொற்றவை  என பல அழகிய சிற்பங்கள் கொண்ட கோயில் இது. மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது. இக்கோயில் குறித்த தகவல்கள்  காஞ்சி  புராணத்தில் காணப்படுகிறது. 

மார்க்கண்டேயர்  

மிருகண்டு  முனிவரின் மகனாக பிறந்த மார்க்கண்டேயர். மார்க்கண்டேயர்  எதிர்காலம் குறித்த  அறிய அவரது தந்தை மிருகண்டு முனிவர் ஜோதிடம் பார்த்த பொழுது, 16 வயதில்  அவன் இறந்து விடுவான் என கூறப்பட்டது மற்ற ஞானிகளும் , அவ்வாறு நடக்கும் என கூறியதால், மிருகண்டு அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர்  மார்க்கண்டேயர்   நினைத்து   தினமும் வருந்தி வந்த நிலையில், மார்க்கண்டேயர் நாட்டமெல்லாம் சிவபூஜையில் தான் இருந்தது.Maha Shivaratri 2024 : பக்தனுக்காக எமனை எதிர்த்த சிவன்.. சிரஞ்சீவியாய் வாழ  காஞ்சி கோவில் சிறப்புகள்..

சிவபெருமானிடம் பூரணமாகச் சரணாகதி அடைந்தான். மார்க்கண்டேயர் உயிர் பிரியும் நாள் என்று சிவ பூஜையில் தன்னை மறந்து, சிவ வழிபாடு மேற்கொண்டு வந்துள்ளார். அப்பொழுது எமது தூதர்கள் அவர் உயிரை எடுக்க முயற்சி செய்த பொழுது பலன் அளிக்கவில்லை.  இறுதியில் எமதர்மனே நேரில் வந்து பாச கயிறை வீசுகிறான், அப்பொழுது  சிவலிங்கத்தை கட்டிப்பிடித்த மார்க்கண்டேயர், என்ன ஆச்சரியம் உக்கிரமூர்தியாகச் சிவபெருமான் தோன்றி காலனை எட்டி உதைக்கின்றார், என்றும் 16- வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ அம்பலத்தரசர் அருள்பாலிக்கின்றார் என்பது நம்பிக்கை. சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.

Maha Shivaratri 2024 : பக்தனுக்காக எமனை எதிர்த்த சிவன்.. சிரஞ்சீவியாய் வாழ  காஞ்சி கோவில் சிறப்புகள்..

அமைவிடம் 

கம்மாளத் தெரு -  காஞ்சிபுரம் 
புதிய ரயில் நிலையம் அருகில் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget