Madurai ; உசிலம்பட்டியில் நடைபெற்ற கிடா முட்டுப் போட்டி ; அண்டா உள்ளிட்ட சிறப்புப் பரிசு
நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கிடாக்களில் அதிகமுறை மோதிக் கொண்டு இந்த போட்டியில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு பித்தளை அண்டாகள் பரிசாக கிராம கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது.
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நீதிமன்ற அனுமதி பெற்று கிடா முட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பாரம்பரிய விளையாட்டுப் போட்டி
பாரம்பரிய விளையாட்டுப் போட்டி தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டியைப் போல் சேவல் சண்டை, மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டுப் போட்டி, கிடாய் முட்டு சண்டை உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்படும். குறிப்பாக பொங்கல் தினத்தை யொட்டியும், ஆடி மாதத்திலும், கிராம திருவிழாக்களைத் தொடர்ந்தும் இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- பிரஜ்னா 2024 திட்டத்தில் பள்ளிகளுக்கான போட்டி; பழனியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சாதனை
கிடா முட்டு போட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது மந்தையம்மன் கோவில்., இந்த கோவிலின் பங்குனி பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கிடா முட்டு போட்டி நடத்துவதை இந்த கிராம மக்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த ஆண்டு பங்குனி பொங்கல் கொண்டாடிய போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் கிடா முட்டு போட்டி நடத்த அனுமதி பெற முடியவில்லை என கூறப்படுகிறது.,
மதுரை: உசிலம்பட்டி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற கிடா முட்டு போட்டி #Madurai #RamFighting #TamilNews pic.twitter.com/CapEJYsYER
— ABP Nadu (@abpnadu) July 20, 2024
இந்நிலையில் இன்று கிடா முட்டு போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உரிய அனுமதியை பெற்று கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் மாபெரும் கிடாமுட்டு போட்டி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கருமறை, வெள்ளைமறை, குரும்பை உள்ளிட்ட பல்வேறு வகையான 80 ஜோடி கிடாக்கள் இந்த போட்டியில் பங்கேற்றன. நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் கிடாக்களில் அதிகமுறை மோதிக் கொண்டு இந்த போட்டியில் வெற்றி பெறும் கிடாக்களுக்கு பித்தளை அண்டாக்கள் பரிசாக கிராம கமிட்டி சார்பில் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு கிடா முட்டு போட்டியை கண்டு ரசித்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - எய்ம்ஸ் மாணவர்களை தற்காலிமாக மதுரைக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் கைவிடல் - எம்பி மாணிக்கம் தாகூர்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Aadi Festival 2024: ஆடி முதல் வெள்ளி... 301 கிலோ மஞ்சள், 51 அம்மியில் மஞ்சள் அரைத்து காரைக்குடி பக்தைகள் வழிபாடு