மேலும் அறிய

மணிகண்டன் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

’’மறு உடற்கூராய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்யவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவு’’

ராமநாதபுரம் மாவட்டம் ஆனைசேரியைச் சேர்ந்த ராமலெட்சுமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "எனது கணவர் மாற்றுத்திறனாளி.  நான்கு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் மணிகண்டன் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். கடந்த 4ஆம் தேதி மணிகண்டன் அவரது நண்பர்களோடு சேர்ந்து உரங்களை வாங்குவதற்காக சென்ற நிலையில், கீழத்தூவல் காளி கோவில் அருகே காவலர்கள் லட்சுமணன் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மணிகண்டன் வாகனத்தை நிறுத்தாமல் செல்லவே, அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கினர்.

மணிகண்டன் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

பின்னர் கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு வந்து மகனை அழைத்துச் செல்லுமாறு காவல் நிலையத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. காவல் நிலையத்தில் இருந்த காவல் ஆய்வாளர்கள் லட்சுமி மற்றும் கற்பகம் ஆகியோர் மணிகண்டனை விரைவாக அழைத்துச் செல்லுமாறு அவசரப்படுத்தினார். அதோடு எனது மகனை புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மகனை வீட்டிற்கு அழைத்து சென்ற போது உடல் முழுவதும் வலியாக இருப்பதாகவும், காவல்துறையினர் பிறப்புறுப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்தார். மறுநாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக மகனிடம் தெரிவித்திருந்த நிலையில், அதிகாலை 1.30 மணி அளவில்  உயிரிழந்தார்.

மணிகண்டன் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு

அவரது உடல் உடற்கூராய்விற்காக  முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனது மகனின் மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. காவல்துறையினர் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதே மகனின் இறப்பிற்கு காரணம். மகனின் உடலை மறுஉடற்கூறு ஆய்வு செய்யும் பட்சத்திலேயே இறப்பிற்கான காரணம் தெரியவரும். ஆகவே மகனின் உடலை மறு உடற்கூறு ஆய்வு செய்யவும், முதுநிலை காவல்துறையினர் மூலம் இந்த வழக்கை விசாரிக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "காவல் துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே மணிகண்டன் 3 முறை ரத்தவாந்தி எடுத்துள்ளார். அதன் பின்னரே அதிகாலை 1.30 மணிக்கு உயிரிழந்துள்ளார். 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. ஆனால் காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட சிசிடிவி பதிவு 2 நிமிடம் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. இதையேற்ற நீதிபதி, மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு உடற்கூறாய்வு செய்யவும், அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு வழக்கை 1 வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்த விவகாரம் - அலட்சியமாக இருந்த தாய் மீது வழக்கு..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Father Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalinவிஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
விமானப் பயணிகள் கவனத்திற்கு! விடாது பெய்யப்போகும் மழை! விமான நிலையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"அச்சத்தில் மக்கள்" புதிய பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்.. ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிகம்!
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்?  -  அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
கரூரில் விமான நிலையம் எப்போது வரும்? - அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த சூப்பர் அப்டேட்
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
TNUHDB : “90% காலி, 100% காலி” தள்ளாடும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்..!
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
Dhanush Aishwarya : தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து வாங்கியாச்சு...குழந்தைகள் நிலைமை என்ன?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
காதலர் கொடுத்த மன உளைச்சல்: அசைவ உணவுக்காக உயிரை விட்ட பெண் விமானி? என்ன நடந்தது?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Fengal Cyclone Update: ’’வரும்.. ஆனா வராது..’’ ஃபெங்கல் புயலாக கரையை கடக்காது; என்ன காரணம் தெரியுமா?
Embed widget