காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

காவலர் முதல் சார்பு ஆய்வாளர் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக அரசாணையை நடைமுறைப்படுத்த கோரிய வழக்கு, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது விசாரணையின் போது தனியார் நிறுவனங்கள், அரசு அலுவலர்களுக்கு சங்கங்கள் இருக்கும் நிலையில் காவல்துறைக்கு ஏன் சங்கங்கள் இல்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளம், ஆதிரா உள்ளிட்ட மாநிலங்களில் காவலர்களுக்கு சங்கம் இருக்கும் போது தமிழ்நாட்டில் ஏன் இல்லை எனவும் கேள்வி எழுப்பினர்.
காவலர் விடுமுறை அரசாணையை உயரதிகாரிகள் நடைமுறைப்படுத்தாது ஏன், இது ஜனநாயகத்திற்கு எதிரானது இல்லையா, முதலமைச்சரின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லையா என கேள்வி எழுப்பினர். மேலும், காவலர் விடுமுறை எந்த வகையில் பின்பற்றப்படுகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.
"This is a breaking news story and is being updated. Please refresh for the latest updates."

