M.K Azhagiri Release: வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கு.. மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை..
வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் மு.க அழகிரியை விடுதலை செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு 2011 ஆம் தொடரப்பட்டது. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வட்டாட்சியரை தாக்கியதாக கூறப்படும் வழக்கில் மு.க அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமரா உடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். வீடியோ எடுத்ததன் காரணமாக, மு.க. அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை தாக்கியதாக தாசில்தார் காளிமுத்து, கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட JM 1 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு தொடர்பாக ஏற்கனவே சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி முத்துலெட்சுமி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகளான ரகுபதி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மு.க அழகிரி மற்றும் நிர்வாகிகள் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள்.