Madras HC on Vaccination | கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திருநர்களுக்கு முன்னுரிமை : சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
தடுப்பூசி செலுத்துவதில் திருநர்களுக்கு முன்னூரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் திருநர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை கிரேஸ்பானு சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவியாக ரூ.4 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. குடும்ப அட்டை, அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் தமிழக அரசின் கொரோனா நிவாரண உதவித் தொகை வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குடும்ப அட்டை இல்லாத 8 ஆயிரத்து 493 திருநர்களுக்கு நல வாரியம் மூலம் கொரோனா நிவாரண உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்தது. இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், தடுப்பூசி செலுத்துவதில், திருநர்களுக்கு முன்னூரிமை வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Covid Vaccination | மக்கள் தொகை, நோயளவு அடிப்படையில் தடுப்பூசி; வந்தாச்சு புதிய தடுப்பூசி பாலிசி.
சுவொ மோட்டோ கொரோனா வழக்கில், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், குறுகிய வருகைகளில் வந்து வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் அல்லது சர்வதேச பயணத்தை மேற்கொள்ள வேண்டிய மற்றவர்களுக்கும், மாநில மற்றும் மத்திய அரசு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதை பரிசீலிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக சில விதிமுறைகள் வைக்கப்பட வேண்டும் என்றும் ஒருவர் பரிந்துரைத்தார்.
அப்போது, "பலவிதமான பின்புலங்கள் கொண்ட குடிமக்கள் அல்லது குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களின் வசதிகளை கவனித்துக்கொள்ளும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுபோன்ற அம்சங்களை ஆராயும் என்று நம்பப்படுகிறது" என்று நீதிபதிகள் கூறினர். மேலும், இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ள நீதிமன்றம், இந்த வழக்கை வரும் ஜூன் 21-ஆம் தேதி ஒத்திவைத்தது.
Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!