ஆன்லைன் விசாரணையில் ஏற்பட்ட விபரீதம்: ஜனவரி 3 முதல் நேரடி விசாரணை மட்டுமே; உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு
ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று ஆரம்பித்த போது நீதிமன்ற வழக்கு விசாரணை முழுக்க ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது. தொற்றின் விகிதம் குறையத் தொடங்கியதும் நேரடி மற்றும் காணொளி காட்சி விசாரணை என கலப்பு விசாரணை முறை தற்போது அமலில் இருந்து வந்தது.
இந்நிலையில், ஜனவரி 3 ஆம் தேதி முதல் நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் மறு உத்தரவு வரும் வரை நேரடி விசாரணை தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற கிளை ஆகியவற்றில் காணொலிக்காட்சி முறையிலான விசாரணை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற காணொலி விசாரணையில் நீதிபதி தீர்ப்பு வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கேமரா ஆனில் இருப்பது தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், காணொளி காட்சி விசாரணையின் போது பெண்ணிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட வழக்கறிஞரை தொழில் செய்ய தடை விதிக்குமாறு பார் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதோடு, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்த காட்சிகளை சிலர் பதிவு செய்ததால் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள நீதிபதிகள் பி.என் பிரகாஷ், ஹேமலதா அமர்வு இது போன்ற சம்பவங்களை கண்ணை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என தெரிவித்தனர்.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீடியொ காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கக்கோரியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு புதுச்சேரி, தமிழகம் பார்கவுன்சில் தொழில் செய்ய தடை விதித்து அவருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒரு வழக்கறிஞரே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்