HBD M Karunanidhi: திருக்குவளையிலிருந்து உதித்த சூரியன் - குவியும் வாழ்த்துகள்!
மு.கருணாநிதி பிறந்தநாளில் அரசியல் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் பலரின் டிவிட்டர் வாழ்த்துகள்
அரசியல், இலக்கியம், பத்திரிக்கைத்துறை, நாடகம், சினிமா உள்ளிட்ட பலதுறைகளில் கோலோச்சியவர் திருக்குவளையில் பிறந்த மாணிக்கம் கலைஞர் மு.கருணாநிதி. தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர். வாழும்காலம் முழுக்க தமிழின் மீதும், தமிழர்களின் மீதும் பெருங்காதலோடு இருந்தார். மாநில உரிமை, சமூகநீதி, சுயமரியாதை உள்ளிட்ட பல கொள்கைகளின் வழியே வாழ்ந்துக்காட்டியவர். திராட கொள்கைகளும் திராவிட இயக்கமும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடங்கி, அதன் வளர்ச்சிக்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர். அவரின் 99 வது பிறந்தநாளான இன்று அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டவர்களின் வாழ்த்துச் செய்திகளின் தொகுப்பு இது.
80 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் - தமிழர் என உழைத்து உயர்ந்தவர் தலைவர் கலைஞர். திராவிடக் கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்த அவரது வாழ்க்கை, வருங்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டக் கூடிய வரலாறாகும். #HBDKalaignar99 pic.twitter.com/bBIU3erytx
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) June 2, 2022
#ஜூன்_03: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். இந்நாளை 'மாநில சுயாட்சி நாளாக' நினைவுகூர்வதே அவரது பங்களிப்புக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும். புது தில்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தடைகளாக உள்ளன. மாநில அரசுகள் அதிகார வலிமைபெற (1/2).. pic.twitter.com/JX0IV2VP70
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 2, 2022
கலைஞர்தான் முதன்முதலில் குரலெழுப்பியவர். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையிலான உறவுகள் குறித்து ஆய்வதற்கு ஆணையம் அமைத்தவர். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என திமுகவின் கொள்கை முழக்கங்களுள் ஒன்றாக முன்வைத்தவர்.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) June 2, 2022
இந்நாளில் கலைஞரின் கனவை நனவாக்க உறுதியேற்போம். pic.twitter.com/668G22hMiAதமிழுக்காகவும் தமிழர் நலனுக்காகவும் வாழ்நாளெல்லாம் போராடிய போராளி; ஆட்சித் தேரைச் சமூகநீதிப் பாதையில் செலுத்திய சமத்துவச் சிந்தனையாளர்; திராவிடக் கொள்கைகளால் தமிழ்ச் சமூகத்தைத் தட்டியெழுப்பிய பகுத்தறிவாளர்; 'உடன்பிறப்பே...' என நம்மை உளமார அழைத்து உணர்வூட்டிய தலைவர்! (1/2) pic.twitter.com/WIv0vjd2Dy
— M.K.Stalin (@mkstalin) June 3, 2022மறையாச் சூரியன் முத்தமிழறிஞரின் நினைவுகளைச் சுமந்து நிற்கும் அவரின் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த, கலைஞரின் திருவுருவப் படத்துக்கு அவரின் பிறந்தநாளான இன்று மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் & அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து மரியாதை செய்தோம். #HBDKalaignar99 pic.twitter.com/Nu6SBB3RsI
— Udhay (@Udhaystalin) June 3, 2022எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) June 3, 2022கலைஞர் 99#HBDKalaignar99 #கலைஞர்99 #Kalaignar99 pic.twitter.com/iM7ocjf4IZ
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2022திராவிட இயக்க கொள்கை வழியில் நவீன தமிழ்நாட்டை உருவாக்க பல திட்டங்களை, சட்டங்களை வகுத்தளித்து, காலத்தை வென்ற தலைவராய் மக்கள் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளில் மாண்புமிகு முதல்வர் @mkstalin தலைமையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தளராது உழைப்போமென உறுதி ஏற்போம். pic.twitter.com/pG1TDJgc02
— Dr P Thiaga Rajan (PTR) (@ptrmadurai) June 3, 2022