மேலும் அறிய

வங்கக் கடலில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட் இதோ!

வங்க கடலில் வரும் 30ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி?

வங்க கடலில் வரும் 30ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“ வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள்  மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 

26.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

28.09.2023 மற்றும் 29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள்  மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்: 
28.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

25.09.2023: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும்  அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.09.2023:  எச்சரிக்கை ஏதுமில்லை.

27.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள்,  தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய  மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Embed widget