மேலும் அறிய
Advertisement
பேஸ்புக் மூலம் காதல்..! வீட்டின் எதிர்ப்பை மீறி மாற்றுத்திறனாளி இளைஞரை கரம்பிடித்த பெண்
வேல்முருகனை நேரில் சந்தித்த ஜமுனா நாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால், இருவரும் வேல்முருகன் வீட்டின் அருகே உள்ள அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி வட்டகுலம் பகுதியைச் சேர்ந்தவர் மாற்று திறனாளியான வேல்முருகன் (29). முகநூலில் அதிகம் நேரம் செலவிட்டு வருவது வழக்கம், இந்த நிலையில் இவருக்கும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கோட்டக்குப்பம் பகுதியில் வசித்து வரும் ஜமுனா (21) எனும் பெண்ணுக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு உள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மின்வாரியத்தின் அலட்சியத்தால் பரமக்குடி அருகே தாழ்வாக செல்லும் மின் கம்பியால் கை கால்களை இழக்கும் அவலம்
இந்த முகநூல் பழக்க போக போக நாளடைவில் காதலாக மாறி இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காமல் கடந்த 4 வருடங்களாக பேஸ்புக் மூலம் காதலித்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஜமுனா வீட்டில் தீடீரென அவருக்கு திருமண செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று உள்ளது. இதனை யோசித்த ஜமுனா முகநூலில் காதலித்தவரை கரம்பிடிக்க விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டம் குமராட்சிக்கு வந்து உள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தை ரத்ததில் தோய வைத்த மொழிப்போரும் அதன் தியாகிகளின் வரலாறும்...!
பின்னர் வேல்முருகனை நேரில் சந்தித்த ஜமுனா நாம் உடனே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியதால், இருவரும் வேல்முருகன் வீட்டின் அருகே உள்ள அம்மன் கோவிலில் நண்பர்கள் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் குமராட்சி காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் அமுதாவை சந்தித்து நடந்தவைகளை கூறினர். உடனே காவல் துறையினர் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சொத்து விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், ஓபிஆர் மீது தொடரப்பட்ட வழக்கு - ஆவணங்களை சரி பார்க்கும் பணிகள் தீவிரம்
இதனை தொடர்ந்து பெற்றோர்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில், ஜமுனாவின் பெற்றோர்கள் ஜமுனாவை குமராட்சியில் விட்டு விட்டு ஊருக்கு திரும்பி சென்றனர், பின்னர் காவல் ஆய்வாளர் அமுதா இருவருக்கும் போதிய பாதுகாப்பு வழங்கி தம்பதிகளை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவர்கள் கோயில் வாசலில் வேல்முருகன் கட்டிய லுங்கியுடன் இருவரும் திருமணம் செய்ய வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- குடியரசு தினத்தன்று ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தேசியக்கொடி ஏற்றக்கூடாது - நாராயணசாமி போர்க்கொடி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion