மேலும் அறிய

தெருக்குழாயில் குளித்த சிறுமி: பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவர்: தர்ம அடி கொடுத்த இளைஞர்கள்!

தெரு குழாயில் குளித்த 10 வயது சிறுமியை லாரி டிரைவர் தூக்கிக் கொண்டு லாரியின் சீட்டில் அமர வைத்து கடத்திச் செல்ல முயன்றார்.

விழுப்புரம் : மயிலம் அருகே திருவக்கரை பகுதியில் தெரு குழாயில் குளித்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து லாரியில் கடத்த முயன்ற லாரி டிரைவர் கைது.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள திருவக்கரை முத்துமாரியம்மன் கோவில் தவுட்டுக்குளம் பகுதியில் சாலையோர குடிநீர் குழாயில் அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது திருவக்கரையில் இருந்து டிப்பர் லாரியில் கிரசர் மண் ஏற்றி வந்த, புதுச்சேரி மாநிலம்  சுத்துக்கேணி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் முருகன் (33) அங்கு இறங்கி தண்ணீர் பிடிக்க சென்றார். 

அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதைப் பார்த்த சிறுமியின் உறவுக்கார பெண் அங்கு ஓடி வந்தார். திடீரென லாரி டிரைவர் சிறுமியை தூக்கிக் கொண்டு லாரியின் சீட்டில் அமர வைத்து கடத்திச் செல்ல முயன்றார். அப்போது சிறுமியின் உறவுக்கார பெண், டிரைவர் முருகனின் சட்டையைப் பிடித்து இழுத்து கூச்சலிட்டுள்ளார்.

அப்போது தகாத வார்த்தையால் பேசி சிறுமியை கீழே இறக்கிவிட்டு விட்டு, லாரியை வேகமாக எடுத்துச் சென்று விட்டார். சிறுமியிடமும், உறவுக்காரப் பெண்ணிடமும் நடந்தவற்றை விசாரித்த அப்பகுதி இளைஞர்கள், வானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர்  கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

உடனடியாக அப்பகுதி இளைஞர்கள் அந்தப் பகுதியில் பதிவாகி இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சி மூலம் லாரியின் பதிவு எண் மற்றும் அடையாளங்களை வைத்து திருவக்கரையில் உள்ள பல்வேறு இடங்களில் தேடினர். நேற்று மாலை சுமார் 4 மணியளவில் அதே லாரி நெமிலி வெற்றிவேல் கிரஷர் நிறுவன பகுதியில் லோடு ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது.

சிறுமியும், உறவுக்கார பெண்ணும் கொடுத்த அடையாளத்தின் படி டிரைவர் முருகனை பிடித்து இளைஞர்கள் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தார். ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, டிரைவருக்கு 'தர்ம அடி' கொடுத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து அவரை கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

காவல் ஆய்வாளர் வள்ளி நடத்திய விசாரணையில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. அதைத்தொடர்ந்து லாரி டிரைவர் முருகனை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Breaking News LIVE: நீட் பயிற்சி மையங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன - கிருஷ்ணசாமி
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
கொடைக்கானலில் வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்; திருமண நிகழ்விற்கு சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்
Embed widget