மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் திமுக கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை மும்முரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன . தி.மு.க., அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6, 9-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஒன்றிய கவுன்சிலர் பதவி இடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் என மொத்தம் 27,003 பதவி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் திமுக கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை மும்முரம்

இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு 9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 755 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும், 1,577 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 12 ஆயிரத்து 252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு 35 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 62 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 626 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 1,324 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்களுக்கு அக்டோபர் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இரண்டுக்கும் சேர்த்து வேட்புமனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாளாகும். உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல்: நெல்லையில் திமுக கூட்டணி கட்சி பேச்சுவார்த்தை மும்முரம்

பிரதான கட்சியான தி.மு.க. வேட்பாளர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கியுள்ளது. பொதுவாகவே உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு மாவட்ட அளவிலேயே நடப்பது வழக்கம். அந்த அடிப்படையில் தி.மு.க. மாவட்ட செயாளர்கள் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சி தலைமையிடம் கலந்து பேசி தயாரித்து வருகின்றனர். கூட்டணி கட்சிகளுக்கு தி.மு.க. தலைமை அறிவுறுத்தல்படி இடங்களை பகிர்ந்து கொடுக்கும் பணியிலும் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகியவை தாங்கள் போட்டியிட விரும்பும் வார்டுகள் குறித்த பட்டியலை தி.மு.க. மாவட்ட செயலாளர்களிடம் வழங்கியுள்ளனர்.

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ம.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்ததை தொடர்ந்து தங்களது கூட்டணியில் உள்ள பா.ஜ.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளுடன் வார்டு பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்கள் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சி இடங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி கட்சிகளுக்கு சுமுகமான முறையில் இடங்களை பிரித்து கொடுக்க தி.மு.க., அ.தி.மு.க. மேலிடங்கள் தங்கள் கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளை காட்டிலும் சுயேச்சைகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget