Local body election 2022| உள்ளாட்சித் தேர்தல் விசிட்:- ரோப் கார் வசதியை கேட்கும் புகலூர் நகராட்சி...!
புகழூர் நகராட்சியில் சுமார் 16 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. 2022 கணிப்பின் படி மொத்த வாக்காளர்கள் 24, 379 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 10,462 பேரும், பெண் வாக்காளர்கள் 13, 915 வாக்காளர்களும், மூன்றாம் பாலினர் இரண்டு பேரும் உள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் 1985 ஆம் ஆண்டு புஞ்சை புகழூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் இருந்து தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பிரிக்கப்பட்டு தேர்வுநிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் தேர்தல் துறையின் அரசாணை நிலை எண் 112 படி இறுதி ஒப்புதலுடன் புஞ்சைபுகழூர் தேர்வுநிலை பேரூராட்சி உடன் தமிழ்நாடு காகித ஆலை மீண்டும் இணைக்கப்பட்டு புதிதாக இரண்டாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.
புகலூர் நகராட்சியில் மக்கள் தொகை
இந்நிலையில் புஞ்சைபுகழூர் தேர்வுநிலை பேரூராட்சியில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 23,408 ஆக இருந்தது. புஞ்சை புகலூர் பேரூராட்சியில் 18-வார்டு இருந்தது. தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பேரூராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,556 ஆக இருந்தது. இதில் 12 வார்டுகளும் இருந்துள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இரு பேரூராட்சிகளிலும் சேர்த்து 28,964 பேர் உள்ளனர். மொத்தம் 30 வார்டுகள் உள்ளன.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வார்டு மறுவரையறை பணியினை விரிவாக முடிக்கப்பட்டு இரு பேரூராட்சிகளிலும் இருந்து 30 வார்டுகளில் வாக்காளர்களின் எண்ணிக்கையில் புகழூர் நகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது. புகழூர் நகராட்சியில் சுமார் 16 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. 2022 கணிப்பின் படி மொத்த வாக்காளர்கள் 24, 379 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 10,462 பேரும், பெண் வாக்காளர்கள் 13, 915 வாக்காளர்களும், மூன்றாம் பாலினர் இரண்டு பேரும் உள்ளனர்.
புகலூர் நகராட்சியின் சிறப்பு
புகலூர் நகராட்சி பகுதியில் புகழூர் ரயில் நிலையம் அருகில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனமும், அதன் அருகாமையில் மூலிமங்கலம் அருகே டிஎன்பிஎல் சிமெண்ட் நிறுவனமும், புகழூர் செம்மாண்டம் பாளையத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள் செயல்பட்டு வருகிறது. புகலூர் செய்தித்தாள் காகித ஆலை அருகில் ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று சென்று செல்கின்றனர். காவிரி ஆற்றில் 490 கோடி செலவில் கதவணை கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புகலூர் நகராட்சியில் தாலுகா அலுவலகம் உள்ளது.
புகலூர் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
புகலூரில் புகழ்பெற்ற புகழி மலை முருகன் கோயிலுக்கு செல்லும் வகையில் ரோப்கார் திட்டம் செயல்படுத்த வேண்டும். புகலூரில் நகராட்சியில் பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வர வேண்டும், அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைய வேண்டும். நெடுதூர பஸ்கள் இப்பகுதியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். புகலூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தரவேண்டும். காகித ஆலை புகலூர் பேரூராட்சி கட்டுப்பாட்டில் பேச்சிப்பாறை அருகே இருந்த மின் மயானம் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்து செயலாற்றுகிறது. விரைந்து நடவடிக்கை எடுத்து சீரமைத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், தனியார் சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வாய்க்கால் தண்ணீரில் கலக்கிறது.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிப்படைந்து வருகிறது. இவற்றை தடுக்க தொலைநோக்கு பார்வை திட்டம் தயாரித்து கால்வாய்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கை பொதுமக்கள் முன்வைக்கின்றனர்.