மேலும் அறிய

Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!

டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு அதன் அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. முந்தைய திமுக அரசில் இது கட்டாயமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தவெக அரசு வந்த பிறகும் அது மாறவில்லை

டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தொடர்பான பிரச்னை வெடித்துள்ள நிலையில் இன்னும் 10 நாட்களில் நிலைமை சரியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

விஸ்வரூபம் எடுத்த டாஸ்மாக் பிரச்னை

தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்று ஒரு மாதத்தை நெருங்கியுள்ள நிலையில் நாள்தோறும் ஏகப்பட்ட பிரச்னைகள் முதலமைச்சர் விஜய்க்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இருந்தாலும் அத்தனைப் பிரச்னைகளையும் சமாளிக்கும் வகையில் தவெக நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் வருவாய் மூலங்களில் முதன்மையானதாக உள்ள டாஸ்மாக்கில் நடக்கும் பிரச்னைகளை தலைசுற்ற வைக்கிறது. 

போதையில்லா தமிழகம் என்ற கொள்கையோடு செயல்படும் தவெக அரசு முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை மூடியுள்ளது. போதைப்பொருட்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேசமயம் டாஸ்மாக்கில் மதுபாட்டிலுக்கு அதன் அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. முந்தைய திமுக அரசில் இது கட்டாயமாக வசூலிக்கப்பட்ட நிலையில், தவெக அரசு வந்த பிறகும் அது மாறவில்லை என மதுபிரியர்கள் குமுறியுள்ளனர். 

அமைச்சர் விக்னேஷ் கடும் எச்சரிக்கை 

இந்த நிலையில் மதுபாட்டில்களால் ஆபத்து ஏற்படுவதை சுட்டிக்காட்டி விற்பனை செய்யும்போது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி பாட்டில்களை கொடுக்கும்போது அந்த ரூ.10 திருப்பி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டாஸ்மாக் கடைகளில் ரூ.210க்கு விற்பனை செய்யப்படும் ஒரு மதுபாட்டிலுக்கு நீதிமன்றம் சொன்ன டெபாசிட் தொகை ரூ.10 தாண்டி, கூடுதலாக இன்னொரு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இதனால் மதுபிரியர்கள் ரூ.230 கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. 

இதுதொடர்பாக பேசிய மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ், “மதுபாட்டில்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்க கூடாது. இந்த நடைமுறையை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதையும் படிங்க: MLAவை அசிங்கப்படுத்துறீங்களா?.. ஒரு மேயர் சீட் ஜெயிக்க முடியுமா? - திமுகவுக்கு ஆதவ் சவால்!

இணையத்தில் பரவும் வீடியோ

 இதனிடையே இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ பரவி வருகிறது. அது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள டாஸ்மாக் கடையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு மதுவாங்க வந்த ஒருவர் பாட்டிலுக்கு அதன் அடக்கவிலையை விட கூடுதலாக ரூ.20 வசூலிக்கப்பட்டது குறித்து ஊழியரிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு நீதிமன்றம் சொன்னது போல ரூ.10 தருகிறேன். மேற்கொண்டு எதற்கு தர வேண்டும் என கேட்டார். 

அதற்கு டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் கடை ஊழியர், “மதுபாட்டில்கள் வரும்போது சில உடைந்து விடுகிறது. லோடுமேன் எல்லாருக்கும் நாங்கள் இந்த கூடுதல் பணத்தில் இருந்து தான் சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படித்தான் டாஸ்மாக் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு 10 நாட்களுக்கு இந்த பிரச்னை இருக்கும்” என தெரிவிக்கிறார். அதனால் டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிக்கப்படுவது தொடர்பான பிரச்னைக்கு தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்க தயாராகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
"நானும் தலைவர் தான்!" - விசிக மாநாட்டு கூரையின் உச்சிக்கு சென்று போன் பேசியபடி தொண்டர்களுக்கு கை காட்டிய நபர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
Embed widget