மேலும் அறிய
Advertisement
வழக்கு தொடுப்பவரின் பாவங்களைச் வழக்கறிஞர் சுமக்க மாட்டார் - பைபிள் வசனத்தை சுட்டிக்காட்டி மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
பாவம் செய்யும் ஆத்துமாவே சாயும். தகப்பனின் அக்கிரமத்தை மகன் சுமக்கமாட்டான், தகப்பன் மகனின் அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான் - என்ற பைபிள் வசனத்தை சுட்டிக்காட்டி நீதிபதி கருத்து
மதுரை, வழக்கறிஞர் விஜயகோபால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றம் மதுரையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "ஜாமினுக்கு பெற்றவருக்கு பிணை கொடுத்தவர்கள் செய்த முறைகேட்டிற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நான் வழக்கறிஞராக எனது பணியை செய்தேன். இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. எனவே, என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிடவேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பிணைதாரர்கள் கையெழுத்து மற்றும் ஆவணங்கள் போலியானவை என்றால் பிணை கொடுத்தவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும். இந்த வழக்கில் பிணைய கையெழுத்து இட்ட மணி மற்றும் முத்துக்கருப்பன் ஆகிய இருவர் மீதும் வழக்க தொடரப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழக்கறிஞர் தயாரிக்கவில்லை. பிணை கையெழுத்து இட்டவர்கள் கோர்ட்டுக்கு ஆவணங்களை கொடுத்து உள்ளனர். வழக்கறிஞர் எந்த பிரமாண பத்திரமும் தாக்கல் செய்யவில்லை.
எனவே, வழக்கறிஞர் மீது குற்றம் சுமத்தவோ அல்லது தண்டிக்கவோ முடியாது. "பாவம் செய்யும் ஆத்துமாவே சாயும். தகப்பனின் அக்கிரமத்தை மகன் சுமக்கமாட்டான் - தகப்பன் மகனின் அக்கிரமத்தைச் சுமக்கமாட்டான் என்ற பைபிளின் வாசகங்களை மேற்கோள் காட்டிய நீதிபதி இது போல தான், "வழக்கு தொடுப்பவரின் பாவங்களைச் வழக்கறிஞர் சுமக்க மாட்டார்" என்று கருத்து தெரிவித்து. இந்த வழக்கில் இருந்து வழக்கறிஞரை விடுவித்து உத்தரவிட்டார். பிரதான வழக்கு தொடரவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
5 ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த 40 வயது நபருக்கு 5 ஆண்டு சிறை
மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த சிறுமிக்கு இதே பகுதியை சேர்ந்த பாண்டி (வயது 40) என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி, அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், பாண்டி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion