கிருஷ்ணகிரி: 5 மாத குழந்தையைக் கொன்ற தாய் கைது! தன்பாலின உறவால் நிகழ்ந்த கொடூரம்! அதிர்ச்சி தகவல்!
"கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தன்பாலின உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத குழந்தையைக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார்"

Krishnagiri: "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேறொரு பெண் மீது ஏற்பட்ட காதல் காரணமாக, தன்பாலின உறவுக்கு இடையூறாக இருந்த 5 மாத ஆண் குழந்தை இடையூறாக இருக்கும் என கொலை செய்த கல்நெஞ்சம் படித்த தாயின் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது"
5 மாத ஆண் குழந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). இவர் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற பெண்ணுடன் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாரதி மற்றும் சுரேஷ் ஆகிய தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கடந்த 5 மாதத்திற்கு முன்பு பாரதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தைக்கு துருவன் என பெயர் வைத்து, சுரேஷ் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.
மூச்சுத் திணறி உயிரிழந்த குழந்தை ?
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை துருவன் பால் குடிக்கும் இப்போது திடீரென மயங்கியதாக தாய் பாரதி தெரிவித்தார். உடனடியாக மயக்கமடைந்த குழந்தையை, அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அரசு மருத்துவமனையில், குழந்தையை சோதித்த மருத்துவர்கள் வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
காவல்துறைக்கு தகவல்
குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து இது குறித்து மருத்துவமனை சார்பில், கெலமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தன. காவலர்கள் விசாரித்ததில், குழந்தை மரணத்தில் சந்தேகம் இல்லை என பெற்றோர் தெரிவித்ததால், உடற்கூராய்வு செய்யாமல் குழந்தையின் உடலை கொடுத்து அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து உறவினர்கள் 5 மாத குழந்தை நல்லடக்கம் செய்தனர்.
செல்போன் நோண்டிக்கொண்டிருந்த மனைவி
இந்தநிலையில் பாரதி தொடர்ந்து, குழந்தை உயிரிழந்தது தொடர்பாக எந்தவித வருத்தமும் இல்லாமல் செல்போனை நோண்டிக்கொண்டிருந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் சுரேஷ், பாரதி வைத்திருந்த 2 செல்போனில் ஒன்றை வாங்கி சுரேஷ் பார்த்தபோது, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் பாரதி தொடர்ந்து பேசி வந்தது தெரிய வந்தது. மேலும் தனது மனைவி பாரதி அந்த பெண்ணுடன் தன்பாலின உறவில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
20 வயது பெண்ணுடன் தன் பாலின உறவு
இதுதொடர்பாக பாரதியிடம் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது மகள் சுமித்ரா (20) என்பவருடன் 4 ஆண்டுகளாக நெருங்கி பழகி வந்தது தெரியவந்தது. இருவரும் தன்பாலின தொடர்பில் இருந்து வந்ததாகவும் பாரதி சுரேஷிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் சுரேஷ் விசாரித்தபோது, இருவரும் நெருங்கி உல்லாசமாக இருப்பதற்கு 5 மாத குழந்தை தடையாக இருந்ததால், துருவனை கொல்ல சுமித்ரா கூறியதால், குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக பாரதி தெரிவித்தார்.
இரண்டு பெண்களை கைது செய்த போலீசார்
இதனைத் தொடர்ந்து இதுகுறித்து உடனடியாக கெலமங்கலம் காவல் நிலையத்தில் சுரேஷ புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கொலை செய்த தாய் பாரதி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த சுஷ்மிதா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





















