மேலும் அறிய

காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போது, அதை சேமித்து வைக்க, கரூர் மாவட்டத்தின், ஆற்றுப்பகுதியில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள, அமராவதி அணை நீர்மட்டம், 90 அடியாகும். கேரள மாநிலம் மற்றும் உப நதிகள் ஆன சண்முக நதி, குதிரை ஆறு, உப்பாரு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் செல்கிறது. பருவமழை, புயல் காரணமாக கடந்த ஜூலை முதல் மாதத்திலிருந்து, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணை நிரம்பும் நிலையில், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.


காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

இதனால், கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதியில், தடுப்பணைகளை கட்ட வேண்டும். கிளை வாய்க்கால்களை முழுவதுமாக தூர்வார வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. இதுகுறித்து, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதியில் விவசாயிகள் கூறியதாவது, அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால், வறட்சியான காலங்களில் அமராவதி ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயர்ந்தால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவனப் பயிர் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.


காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

இதற்கு ஒரே தீர்வு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணைகளை கட்டுவதுதான் சிறந்தது. உபரி நீர் செல்லும் போது, கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகளில் சேமிக்க முடியும். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை பயன்படுத்தி, விவசாயிகள் வறட்சி காலங்களை சமாளிக்கலாம். பல ஆண்டு கோரிக்கைக்குப்பின், அமராவதி ஆற்றின் குறுக்கே, கடந்த அதிமுக ஆட்சியின் போது, பெரியாண்டாங் கோவில் தடுப்பணை கட்டியுள்ளனர்.


காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்லும் அமராவதி நீர் - விவசாயிகள் வேதனை

அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும் போது, சேமித்து வைக்க கரூர் அமராவதி ஆற்றுப்பகுதியில் தடுப்பணை இல்லாமல், உபரி நீர் திரும்பக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை அதிகமாக உள்ளதால் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். அமராவதி ஆற்றுப் பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஆகையால் தடுப்பணை ஒன்று இருந்தால் வறட்சி காலத்திலும் விவசாயிகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீர் தடுப்பணை இருந்தால் நீரை சேமிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றன.

அதேபோல், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக தடுப்பணைகளை புதிதாக கட்ட வேண்டும். போதிய தடுப்பணைகள் இல்லாததால், கடந்த ஒரு மாத காலமாக அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வீணாக காவிரி ஆற்றின் வழியாக கடலுக்குச் செல்வது வேதனையாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget