(Source: ECI/ABP News/ABP Majha)
Sanatan Dharma in Karur : கரூரில் சனாதனம்.. ”SC சமைச்சா சாப்டமாட்டீங்களா?” சம்பவம் செய்த கலெக்டர் பிரபுசங்கர்
கரூர் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண் சமைப்பதற்காக பணியமத்தப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடாது என கிராம மக்கள் சிலர் கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பட்டியலின பெண் சமைக்க கூடாது என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து நிலையில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த சுமதி என்ற பெண் சமைப்பதற்காக பணியமத்தப்பட்டுள்ளார்.
இந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் என்பதால் பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பட்டியலின பெண் சுமதி என்பவர் சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சாப்பிட்டு பார்த்து பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டியலினப் பெண் சமைத்தால் எங்கள் குழந்தை சாப்பிட முடியாது என ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.