கரூர் அருகே விபத்தில் சிக்கிய லாரி; சாலையில் சிதறிய சோப்புகள் - பெரும் விபத்து தவிர்ப்பு
கரூர் அருகே சோப்பு ஏற்றி வந்த லாரி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் சோப்புகள் சிதறியது.
கரூர் மாவட்டம் மாயனூர் பெட்ரோல் பங்க் அருகே கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி, பாத்திரம் துலக்கும் சோப்பு ஏற்றி வந்தது. லாரியை இரவில் பயணம் செய்து ஓட்டி வந்த ஓட்டுநர் ஆபிரகாம் ( 42 ) உறங்குவதற்காக மாயனூர் அருகே ஓரங்கட்டி இருந்தார்.
இதனிடையில் பின்னால் வந்த டிப்பர் லாரி, நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. அப்போது சோப்பு லோடு லாரி பாய்ந்து அருகில் இருந்த மின் டிரான்ஸ்பர் மீது மோதி முட்டி நின்றது. இந்த நிலையில் லாரியில் ஏற்றி வந்த பாத்திரம் துலக்கும் சோப்பு சாலையில் சிதறி கொட்டி கிடந்தது. மின் ட்ரான்ஸ்பர் மீது முட்டி நின்றதால் டிரான்ஸ்பார்மர் சாயாமல் அப்படியே நின்றது. மின் ஒயர்கள் அறுந்து கீழே விழவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தை அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரவக்குறிச்சி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் பரிசோதனையின் போது பாதுகாப்பு சிலிண்டர் வால்வு திறந்து விபத்து ஏற்பட்டதில் இரு தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
தீயணைப்பு நிலையத்தில் மதியம் 12:30 மணியளவில் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையில் வீரர்கள் பிரபாகரன், வேலவன், கார்த்திகேயன், விக்னேஸ்வரன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் விஷவாயு உள்ள இடத்தில் உபயோகிக்கும் சிலிண்டர்களை எடுத்து பரிசோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டரின் வால்வு திறந்து அழுத்தம் ஏற்பட்டு சுற்றி அடித்ததில் தீயணைப்பு வீரர்கள் பிரபாகரன், கார்த்திக் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து அவர்கள் இருவரும் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
குளித்தலை அருகே லாரி டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர் குழுத்தலையை அடுத்து புத்தூர் உப்பு காட்சி பற்றி சேர்ந்தவர் குமார் லாரி டிரைவர் இருவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் தங்கவேலு வெள்ளைச்சாமி மகன் சந்திரசேகர் ஆகியோருக்கும் பூர்வீக நிலம் வாங்குவது சம்பந்தமாக மின்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் வெள்ளைச்சாமிக்கு ஆதரவாக தொட்டியம் வலையில் காரத் தெருவை சேர்ந்தவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் சங்கர் நிறுவனராக உள்ளவரும் பாலகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று குமாரிடம் கடந்த மாதம் தகராறு ஈடுபட்டார். அது குறித்து குமார் தொகை மலை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெள்ளைசாமி பாலகிருஷ்ணன் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் இந்நிலையில் கலந்த 18ஆம் தேதி அன்று குமாரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பாலகிருஷ்ணன் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து குமார் தோகைமலை போலீசில் மீண்டும் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.