மேலும் அறிய

கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

கரூரில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

கரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்ததால் இன்றும் பள்ளி  கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

கரூரில் நேற்று காலை முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது தொடர்ந்து பரவலாக பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டார்.

கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

வாகன ஓட்டிகள் அவதி

இந்த நிலையில் கரூர், தான்தோன்றி மலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் காலையில் வேலைக்குச் சென்றவர்கள் மலையில் நனைந்து கொண்டும், குடை பிடித்து  சென்றதை காண முடிந்தது. அதனால் வாகன ஒட்டிகள் அவதி அடைந்தனர். கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கையில் குடை பிடித்துக்கொண்டு பேருந்துக்காக காத்திருந்தனர். இந்த மழையால் கரூரில் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மலையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது. வீதிகளிலும் கூட்டம் குறைவாக காணப்பட்டது.

கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

குளித்தலை பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே மழை பெய்ய தொடங்கியது. இந்த மலை இரவு வரை தொடர்ந்து இடைவிடாமல் பெய்து கொண்டிருந்தது. சில நிமிடங்கள் மழை விட்டாலும் மீண்டும் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவே இருந்தது. குளித்தலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் பலர் மழையில் நனைந்தபடியும் அப்பகுதியில் உள்ள கடைகளில் ஓரமாக நின்றபடி பேருந்துக்காக காத்திருந்தனர்.

கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

சாலையோர கடைகள் பல இன்று போடப்படவில்லை. அதேபோல் குளித்தலை காவேரி நகர் மற்றும் உழவர் சந்தை பகுதிகளில் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்யும் காய்கறி வியாபாரிகள் பெரும்பாலானோர் கடைகள் அமைக்கவில்லை. ஒரு சிலரே மழையில் நனைந்தபடி குடை பிடித்து வர வியாபாரம் செய்து வந்தனர்.குளித்தலையில் இன்று வார சந்தை என்பதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொடர் மழை பெய்து வந்த காரணத்தால் குண்டும், குழியுமான சாலைகள் மற்றும் பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது. தொடர் மழையால் வியாபாரிகள் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை...சாலையோரங்களில் தேங்கிய மழைநீர்... மக்கள் அவதி..!

தவிட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், பாலதுறை, புன்னசத்திரம், திருக்காடுதுறை, நத்தமேடு, அத்திப்பாளையம் உள்பட நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்து இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக சாலையின் இரு புறம் உள்ள குழிகளில், மழைநீர் தேங்கி சேரும் சகதியமாக உள்ளது. மழையின் காரணமாக அனைத்து பணிகளும் முற்றிலும் முடங்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
மதுரை மீனாட்சி கோயில் 60 கோடி அறக்கட்டளை சொத்து மோசடி: ஓய்வுபெற்ற சார்பதிவாளர் கைது!
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
சொத்து பத்திரப் பதிவில் இந்த தவறை செய்யாதீங்க !! வருமான வரித்துறை நோட்டீஸ் வர வாய்ப்பு
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
வியாசர்பாடியில் மாறப்போகும் 2 குளங்கள்! நடைபாதை, சைக்கிள் டிராக் என அசத்தல் திட்டம்!
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget