கரூர் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளின் உபரி நீர் வெளியேற்றம்
அமராவதி ஆற்றில் கலந்து 1600 கன அடிக்கும் மேல் அந்த தண்ணீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தப் பாளயம் தடுப்பணையை கடந்து கரூரை நோக்கி செல்கின்றது.
கரூர் அமராவதி ஆற்றின் துணை ஆறுகளின் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 1600 கன அடிக்கும் மேல் அந்த தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் அரவக்குறிச்சி கொத்தப்பாளையம் தடுப்பணையை கடந்து கரூரை நோக்கி செல்கின்றது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் துணை ஆறுகளாக பாலாறு-பொருந்தலாறு, பரப்பலாறு-நங்கஞ்சி ஆறு, வரதமாநதி-குதிரையாறு, குடகனாறு என பல்வேறு ஆறுகள் உள்ளது. இந்த ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் அமராவதி ஆற்றில் கலக்கிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு-பொருந்தலாறு அணைகள் நிரம்பியுள்ளது. இதிலிருந்து 1600 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் அருகே அமராவதி ஆற்றில் கலக்கிறது.
இதுபோல் வரதமாநதி-குதிரையாறுகளில் சுமார் 700 கன அடி தண்ணீர் உபரிநீராக திறக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே உள்ள கொழுமத்தில் அமராவதி ஆற்றில் கலக்கிறது. இந்தத் துணை ஆறுகளில் வெளியேற்றப்படும் தண்ணீர் சுமார் 2000 கன அடி தண்ணீர் அமராவதி ஆற்றில் கலந்து 1600 கன அடிக்கும் மேல் அந்த தண்ணீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கொத்தப் பாளயம் தடுப்பணையை கடந்து கரூரை நோக்கி செல்கின்றது.
மேலும் அமராவதி அணையில் நிலவரப்டி மொத்த உயரம் 90அடிக்கு 88 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3173 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை எந்த நேரமும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமராவதி அணை 89 அடியை தாண்டியதும் அணையின் நலன் கருதி அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றுவார்கள். இதனால் அமராவதி அணையில் இருந்து வரும் தண்ணீரும், துணை ஆறுகளில் இருந்து வரும் தண்ணீரும் ஒன்றாக சேர்ந்து அமராவதி ஆற்றில் வெள்ள பெருக்காக நீர் சென்று சென்று கொண்டிருக்கிறது.