கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.
![கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு Karur: Social activists have alleged that forest officials are cutting down teak trees கரூரில் வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்களை வெட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/659641a755c54e03c2e14448d0eb5d891659497459_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் மாவட்டம், கட்டளை மேட்டு வாய்க்கால் கரை ஓரங்களில் நன்கு வளரக்கூடிய நிலையில் உள்ள பச்சை தேக்கு மரங்களை வெட்டி அகற்றி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கரூர் மாவட்டம், அருகே மாயனூர் காவிரி கதவணையிலிருந்து கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், தென்கரை வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. சுமார் 60 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் பயணிக்கும் இந்த கட்டளை வாய்க்கால்களின் மூலம் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் இந்த இரு வாய்க்காலின் கரைகளை பலப்படுத்துவதற்காக வனத்துறையின் சார்பில் தேக்கு, புங்கை, மா, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் நட்டு வைத்துள்ளனர். புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் மாயனூரில் இருந்து தாயனூர் வரை சுமார் 3500 க்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் நட்டு வைத்துள்ளனர். தற்போது புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கரைகளில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களில் பட்டுப்போன மரங்களை மட்டுமின்றி நன்கு வளரக்கூடிய பச்சை தேக்கு மரங்களையும் வனத்துறை அதிகாரிகள் வெட்டி அகற்றி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வனத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, சரி வர பதில் அளிக்காமல் மழுப்பியும், அதிகார தோரணையில் மிரட்டும் வகையிலும் பேசி வருகின்றனர். முறையான ஏன் அறிவிப்பு விடுத்து மரங்கள் வெட்டப்படுகின்றதா இல்லை. அதிகாரிகள் தங்களின் சுயநல நோக்கத்திற்காக நன்கு வளரக்கூடிய பச்சை மரங்களை வெட்டி வருகிறார்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலர் சரவணனிடம் கேட்டபோது, இந்த வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் இரண்டு புறங்களிலும் சிமெண்ட் கரை கட்டும் பணி நடைபெற்று வருவதால், வனத்துறை சார்பில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றி தருமாறு கேட்டுக் கொண்டதாகவும், மேலும் 50, 60 வருடங்கள் மரங்கள் வெட்டப்படுவதாகவும், அரசு அனுமதி பெற்று மரங்களை வெட்டி அரசு கிடங்கில் வைத்து ஏலம் விடப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)