விபத்தில் சிக்கிய இளைஞர்.. காரை நிறுத்தி முன்னாள் அமைச்சர் செய்த காரியம் - கரூரில் நெகிழ்ச்சி
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு ஓட்டுனரிடம் தனது காரை நிறுத்தச் சொல்லி உள்ளார்.
![விபத்தில் சிக்கிய இளைஞர்.. காரை நிறுத்தி முன்னாள் அமைச்சர் செய்த காரியம் - கரூரில் நெகிழ்ச்சி Karur Road Accident EX Minister M R Vijayabaskar help injured person - TNN விபத்தில் சிக்கிய இளைஞர்.. காரை நிறுத்தி முன்னாள் அமைச்சர் செய்த காரியம் - கரூரில் நெகிழ்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/17/bdb99821a67a9e0c937e7a8b1ac48c6f1726540274905113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே விபத்தில் சிக்கிய இளைஞரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீட்டு, ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்து வாகனம் வரும்வரை காத்திருந்து சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட நரசிம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (35). இவர் சொந்த வேலை காரணமாக வெள்ளகோவில் சென்று விட்டு, கோவை நெடுஞ்சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் கரூர் திரும்பிக் கொண்டிருந்தபோது, தென்னிலை அடுத்த வைரமடை அருகில் அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தபோது, விபத்தில் சிக்கிய இளைஞரை கண்டு ஓட்டுனரிடம் தனது காரை நிறுத்தச் சொல்லி உள்ளார். காரை நிறுத்தியதும் கீழே இறங்கிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தன்னுடன் வந்த கட்சி நிர்வாகிகளிடம் ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்து, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்து வாகனம் வந்த பின்பு விபத்தில் சிக்கிய இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கிய இளைஞர் ஜனார்த்தனன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக விபத்துக்கான காரணம் குறித்து தென்னிலை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)