கரூர்: முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளின் 610 மனுக்களுக்கு தீர்வு - கலெக்டர் பிரபு சங்கர்
தமிழக முதல்வர் உத்தரவின்படி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவை துறை அமைச்சர் ஆலோசனையின் படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் 610 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழக முதல்வர் உத்தரவின்படி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவை துறை அமைச்சர் ஆலோசனையின் படி மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3072 மாற்றுத்திறனாளிகளுக்கு (மனவளர்ச்சி குன்றியவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழு நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள்) பராமரிப்பு உதவித்தொகை (தற்போது மாதம் ரூ. 2 ஆயிரம்) வீதம் ரூ.6,45,12,000 மதிப்பீட்டிலும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 188 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.6,40,000 மதிப்பிலும் பார்வை திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகையாக 9 மாணவர்களுக்கு ரூ.42 மதிப்பிலும் வழங்கப்படுகிறது.
இதேபோல், சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 23 பயனாளிகளுக்கு 5,70,000 மதிப்பிலும், வங்கி கடன் மானியமும், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடனுதவியாக 137 நபர்களுக்கு ரூ 93,31,000 மதிப்பில் கடன் தொகையும், மாற்றுத்திறனாளிகளுக்கான திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 7 பயனாளிகளுக்கு ரூ.2,50,000 மதிப்பிலும், தையல் இயந்திரம் வழங்கும் 45 பயனாளிகளுக்கு ரூ.3,7,800 மதிப்பிலும், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 81 பயனாளிகளுக்கு ரூ.63,86,850 மதிப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 10 நபர்களுக்கு ரூ.9,97,770 மதிப்பிலும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம், முதல்வரின் முகவரியில் 610 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 610 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது.
செவித்திறன் மற்றும் பார்வை திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ஆண்ட்ராய்டு கைபேசி 205 நபர்களுக்கு ரூ.25,52,500 மதிப்பிலும், 432 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து அட்டைகளும், 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் ஊன்றுகோல் ரூ.88,750 மதிப்பிலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 பிரெய்லி வாட்ச் ரூ.32,300 மதிப்பிலும், காதுக்கு பின்னால் அணியும் காதொலி கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 75 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,74,925 மதிப்பிலும், மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 சைக்கிள்கள் ரூ.76,500 மதிப்பிலும், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கும் திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு ரூ.5,640 மதிப்பிலும், மடக்கு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 எண்ணிக்கைகள் ரூ.96,750 மதிப்பிலும், ஜூலை 9ஆம் தேதி வரை 8921 மாற்றுத் திறனாளி நபர்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்