மேலும் அறிய

கரூரில் சமூக விரோதிகளால் ஆபத்தான நிலையிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

இதனை கவனித்து வந்த  சில சமூக விரோதிகள்  இரவு குடிபோதையில் அங்குவந்து அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர்.

கரூர் ஈஸ்வரன் கோயில் பகுதியில் சமூக விரோதிகளால் ஆபத்தான நிலையிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நகர்நல மருத்துவ அதிகாரியின் முயற்சியால் சாந்திவனம் மனநலக் காப்பகத்தினர் சேர்த்தனர்.

கரூரில் சமூக விரோதிகளால் ஆபத்தான நிலையிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

கரூர் அரசு மருத்துவமனை அருகேயுள்ள ஈஸ்வரன் கோவில் எதிரில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து அங்கேயே குளிப்பது, அங்கேயே இயற்கை உபாதைகளை கழிப்பது போன்றவற்றை செய்து வந்திருக்கிறார். இதனை கவனித்து வந்த  சில சமூக விரோதிகள்  இரவு குடிபோதையில் அங்குவந்து அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்துள்ளனர். இதனால் அப்பெண் கூக்குரலிட்டு சத்தம் போட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர்  உடனே ஓடிவந்து அப்பெண்ணை சமூக விரோதிகளிடமிருந்து காப்பாற்றினர். அதுமட்டுமல்லாமல் விடியும் வரை அப்பெண்ணுடனேயே சிலர் பாதுகாப்பாக துணைக்கும் இருந்துள்ளனர். 

கரூரில் சமூக விரோதிகளால் ஆபத்தான நிலையிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அவ்வழியே வந்த கரூர் நகர்நல மருத்துவ அதிகாரி டாக்டர். லட்சிய வர்னாவிடம் அப்பகுதி மக்கள் இதுகுறித்து முறையிட்டுள்ளனர். நகர்நல மருத்துவர் அவர்களும் அப்பெண்ணை பாதுகாக்கும்  பொருட்டு, கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அலுவலர் கனகராஜ்  அவர்களைத் தொடர்புகொண்டு இதுகுறித்து தகவல் அளித்து,  அப்பெண்ணை  மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில், கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அலுவலர்  கனகராஜ் அவர்கள்  சாந்திவனம் மனநலக் காப்பகத்தின்  இயக்குநர் அரசப்பன் அவர்களைத் தொடர்புகொண்டு மேற்கண்ட பெண்ணை உடனடியாக மீட்டு, சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அக்கோரிக்கையினை ஏற்ற சாந்திவனம் மனநலக் காப்பகத்தின் இயக்குநர் அரசப்பன்,   சாந்திவனம் மீட்புக்குழுவினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி, மேற்கண்ட பெண்ணை மீட்டுவருமாறு கூறியிருந்தார்.

கரூரில் சமூக விரோதிகளால் ஆபத்தான நிலையிலிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு

அதனடிப்படையில்,  சாந்திவனம் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் சென்ற சாந்திவனம் மீட்புக்குழுவினரான ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா மற்றும் சூப்பர்வைசர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் அப்பெண்ணின் பெயர் அங்கையர் செல்வி என்பதும், அவர் அப்பகுதியைச் சேர்ந்தவராகவே தெரிகிறார் என்பதும், ஆனால் அவரது உறவினர், சுற்றத்தார் யார் எங்குள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை என்பதும் தெரியவந்தது. உடனே, சாந்திவனம் மீட்புக்குழுவினர் கரூர் டவுன் காவல்நிலையம் சென்று  அப்பெண்ணை மீட்பதற்கான அனுமதிக் கடிதம் CSR பெற்றுக்கொண்டு ஆம்புலன்ஸ் மூலம் அப்பெண்ணை திருச்சி அழைத்துவந்து, மனநல சிகிச்சைக்காக தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மனநல மருத்துவர் டாக்டர் அஜய் அவர்கள் மேற்கண்ட அப்பெண்ணை பரிசோதித்து மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவர் குணம் பெற்றவுடன் அவரது உறவினருடன் ஒப்படைக்கப்படுவார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget