மேலும் அறிய

கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி பலியான மூன்று தொழிலாளர்களின் உறவினர்கள் இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

கரூர் சுக்காலியூர் காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவர் அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். இதில் தாந்தோணி மலை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 23, தோரணங்கள் பட்டியைச் சேர்ந்த சிவகுமார் வயது 35 ஆகியோர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த வீட்டின் அருகே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கழுவு நீர் தொட்டி முடிக்கப்பட்டு சிமெண்ட் பூச்சுகள் முடித்து இருந்தனர். 

 இதில் இரண்டு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்தத் தொட்டியின் உள்புறம் அடிக்கப்பட்டிருந்த பலகைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை அகற்றும் பணியில் மோகன்ராஜ் சிவக்குமார் ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது கழிவுநீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி இரண்டு பேரும் அலறியபடி மயங்கி விழுந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த மணவாசியை சேர்ந்த சிவா என்கின்ற ராஜேஷ் என்பவர் அவர்கள் இரண்டு பேரையும் மீட்க முயன்று உள்ளார். இதில் அவரும் விஷவாயுத்தாக்கி மயக்கமடைந்தார். 

கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கரூர் தீயணைப்பு நிலையத்திற்கும் தான்தோன்றி மலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் மயங்கி கிடந்த மூன்று பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சுந்தரவதனம்,  போலீஸ் துணைசூப்பிரண்ட் தேவராஜ் உள்ளிட்ட போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தின.  

கரூரில் விஷவாயு தாக்கி இறந்த 3 தொழிலாளர்கள் - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இதற்கிடையே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி பலியான மூன்று பேரின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கழிவு நீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மூன்று பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த தொழிலாளர்கள் மூவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தினருக்கு அரசு வேலை வேண்டி என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையால் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்

தலைப்பு செய்திகள்

இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
இனி Traffic தலைவலி இருக்காது! ரூ.20 கோடி செலவு... 1 வருடத்தில் முடிவு! சேலம் மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகிறது!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
அமித் ஷாவுக்கு பரிசளிக்கப்பட்ட தங்க ஓடு: மாத்ரிமந்திர் ‘கோல்டன் டைல்’ ரகசியம் தெரியுமா?
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!
பானிப்பூரி விற்ற கை… இனி ஸ்டெதஸ்கோப் பிடிக்கும்! நீட் தேர்வில் சாதித்த புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget