மேலும் அறிய

ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

கரூரில் நயாரா பெட்ரோல் பங்க் நிறுவனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டு வந்தது. தற்போது மெல்ல மெல்ல அந்த நிலை மாறி வருகிறது. இந்த நிலையில், கரூரில் நயாரா பெட்ரோல் பங்க் நிறுவனங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்படுவதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

தமிழகம் முழுவதும் எஸ்ஸார் நிறுவனத்தின் சார்பில் செயல்பட்டு வந்த பெட்ரோல் பங்குகள் "நயாரா" என்ற நிறுவனம் வாங்கி எரிபொருள் விற்பனை செய்து வருகின்றது. கரூரில் பல்வேறு இடங்களில் இந்த பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்க் ஒன்றில், தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 108 ரூபாய் 19 காசுகள் விற்பனை செய்யப்படுவதாக அதே பகுதியில் இருக்கும் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். 

ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்குகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நயாரா பெட்ரோல் பங்குகளில் மட்டும் நிர்ணயம் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்வது அதிர்ச்சி அளிப்பதாக அந்த நபர் தெரிவித்தார்.

ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

இதுகுறித்து புகார் தெரிவித்த நபர் கூறுகையில், “நான் வெங்கமேடு பகுதியில் லட்சுமி கிரில் பட்டறை வைத்துள்ளேன். எனக்கு ஒரு ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்கள் உள்ளது. இந்த நிலையில், நான் இன்று பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் அடிக்கும் பொழுது, பெட்ரோல் விலை கேட்கும்போது தான் எனக்கு அந்த பங்கில் நடக்கும் மோசடி குறித்து தெரிய வந்தது.

ரூ.108க்கு விற்கப்படும் பெட்ரோல்; இதுவரை கவனிக்காத மக்கள்-ஒருவர் மட்டும் கண்டுபிடித்தது எப்படி?

பெட்ரோல் விலை உயர்வை குறித்து வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த லட்சுமி கிரில் ஒர்க்  உரிமையாளர் சபரீசன் புகைப்படம்.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் உள்ளிட்ட 102 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், கடந்த ஆறு மாத காலமாக இந்த பெட்ரோல் நார்மல் விலையை விட அதிகபட்ச விலை வைத்து பெட்ரோல் அடிப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. இதைப்பற்றி பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் கேட்ட போது,  ’எங்கள் பங்கின் விலை இவ்வளவு தான் என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்’. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தயவு செய்து பெட்ரோல் அடிக்கும் பொழுது பெட்ரோலின் விலை எவ்வளவு என்ன பில் தருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதே போல் கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள நயாரா பெட்ரோல் பங்கில் விலையை குறைக்காவிட்டால் வெங்கமேடு பகுதி பொதுமக்களை திரட்டி பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறேன்’ என கூறினார்.

கரூர் மாவட்டத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் சில தனியார் பெட்ரோல் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் குறிப்பாக நயாரா பெட்ரோல் பங்கில் மட்டும் இத்தகைய விலை உயர்வால் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக இந்த நயாரா பெட்ரோல் பங்கில் 108 ரூபாய்க்கு விற்கப்படும் விலை குறித்து இதுவரை யாரும் கவனிக்கவில்லை என்பதுதான் வேடிக்கையான ஒரு நிகழ்வு.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
Citroen Basalt Vs Kia Sonet: சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
Embed widget