வீடு இடிந்து வீட்டுக்குள் சிக்கிய மூதாட்டி- 3 மணி நேரம் போராட்டத்துக்கு பின் சடலமாக மீட்பு
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் பழைய மார்க்கெட் கடை வீதி பகுதியில் குடியிருந்து வருபவர் பாத்திமா பீவி ( 74) இவரது கணவர் பத்தாண்டுகள் முன்பு இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பழைய மார்க்கெட் கடை வீதி பகுதியில் குடியிருந்து வருபவர் பாத்திமா பீவி (74) இவரது கணவர் பத்தாண்டுகள் முன்பு இறந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகள் மூன்று மகன்கள் உள்ளனர். 70 ஆண்டுகள் பழமையான வீடு என்பதால் ஆறு மாதத்திற்கு முன்பு வீட்டை இடிப்பதற்கு திட்டமிட்டனர். ஆனால் பாத்திமா பிவி தான் இருக்கும் வரை வீட்டை இடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் வீட்டை இடிக்காமல் விட்டு விட்டனர். ஆனால் இன்று காலை வீட்டின் அருகே குப்பைகளை கொட்டி விட்டு மூதாட்டி வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வீடு இடிந்து விழுந்தது.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு வந்து கட்டிட ஈடுபாடுகளை அகற்றி மூதாட்டியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் தீயணைப்பு நிலை வீரர்கள் 25 பேரும் காவல் துறையினர் 25 பேரும் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் நேரில் சென்று இடிந்து விழுந்த வீட்டினை பார்வையிட்டு மூதாட்டியை மீட்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மூதாட்டியின் உடலை சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





















