கரூர் ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 2,090 கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா பாசன பகுதிக்காக காவியாற்றில் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது.
ஆத்துப்பாளையம் அணைக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது. கரூர் மாவட்டம், கா பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு , 8 கனஅடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 7.51 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணை:
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு,2,090 கனஅடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா பாசன பகுதிக்காக காவேரியாற்றில் திறக்கப்பட்டது. இதனால் கீழ்கட்டளை வாய்க்காலில் திறக்கப்பட்ட, 250 கன அடி தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும் தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை:
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வினாடிக்கு, 123 கன அடி தண்ணீர் வந்தது. நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 215 கன அடியாக சற்று அதிகரித்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 123 கன அடி தண்ணீர் வினாடிக்கு 100 ஆக குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 66.74 அடியாக இருந்தது.