![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை
கரூர் பவித்திரம் மலையூர் கிராம பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. தனியார் கல்குவாரி பிரசித்தி பெற்ற தொல்லியல் சின்னம் மற்றும்விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது.
![கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை Karur news villagers are affected by the illegal quarrying, the village is unfit to live due to the crumbling soil TNN கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரி; வாழ தகுதியற்ற கிராமம் - மக்கள் வேதனை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/12/08f21a5cb9c2d80c5d7ce8af632c1c151697091654149113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கிராம கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி, தென்னிலை, புகளூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் அரசு அனுமதி பெற்றும் பெறாமலும் இயங்கி வருகிறது. தரையில் ஆழமாக வெட்டப்பட்டு அங்கிருந்து கற்களை எடுத்து அருகிலுள்ள கல் உடைக்கும் கிரசரில் அரை ஜல்லி, முக்கால் ஜல்லி மற்றும் எம் சாண்ட்,பி சாண்ட் என இயந்திரம் மூலம் பிரிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கல்குவாரியில் அளவுக்கு அதிகமாக ஆழமாக தோண்டப்பட்டுள்ளதாகவும், ஒரு சில விதிகளை மீறி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து சம்பந்தப்ட்ட குவாரிகளுக்கு அரசு அபராதம் விதித்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து கல்குவாரி விதிகளுக்கு முன்பாக செயல்படுவதாக கூறி வருகின்றனர்.
கரூர் பவித்திரம் மலையூர் கிராம பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் கல்குவாரி அருகே பிரசித்தி பெற்ற தொல்லியல் சின்னம் மற்றும் பழமை வாய்ந்த பாலமலை முருகன் கோவில் மற்றும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. குற்றச்சாட்டப்ட்ட விதிகளுக்கு புறம்பாகவும், அரசு அபராதம் விதித்த அதே கல்குவாரியில் கற்களை வெட்டி எடுக்கின்றனர். இந்த கல்குவாரியில் ஒரே நேரத்தில் கற்களை எடுப்பதற்காக வெடிவைத்து வெடிக்க செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகள் அதிர்வு காணப்படுகிறது. ஊர் முழுவதும் ஒரே கிரசர் மண் இருந்து வருகிறது. இந்த கிராமத்தில் வாழ தகுதியற்ற சூழ்நிலை உள்ளது. இதனை தடை செய்யக்கோரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் புவியல் துறை மற்றும் சுரங்க துறை தாசில்தார், விஏஓ என பலரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த கல்குவாரி தடைசெய்யாமல் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நான்கு கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதித்த கல்குவாரியில் தான் தற்போது கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். எனவே சிறப்பு குழு அமைத்து கல்குவாரியை ஜிபிஎஸ் மூலம் ஆய்வு செய்து அறிக்கை பெற்றால் கனிமக் கொள்ளையை கண்டறியலாம் பழைய குவாரிக்கு அருகிலேயே புதிய குவாரிக்கு அனுமதி பெற்றுக்கொண்டு அனுமதி முடிந்த குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் சிலரும் உடந்தையாக உள்ளனர் எனவே சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றசாட்டுகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)