வரத்து குறைவால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு திடீர் குறைப்பு
அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.
வரத்து குறைவால், அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு, திடீரென குறைக்கப்பட்டது. கேரள மாநிலம் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், மலை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 100 கன அடியை தாண்டவில்லை. காலை வினாடிக்கு 76 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 62 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட, 2100 கன அடி தண்ணீர், நேற்று காலை வினாடிக்கு, 1419 கன அடியாக குறைக்கப்பட்டது. அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440 காண அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி கொண்ட அணை நீர்மட்டம், 52.96 அடியாக இருந்தது.
மாயனூர் கதவணை நிலவரம்:
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு, 11 ஆயிரத்து 365 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் 1045 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 600 கன அடியும், கீழ் கட்டளை வாய்க்காலில் 200 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
நங்காஞ்சி அணை நிலவரம்:
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலை பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 28.67 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை:
க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 600 மணி நிலவரம் படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 10.98 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.