திமுக அரசை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப்போவதாக போயர் மக்கள் அறிவிப்பு
உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் கரூர் காந்திகிராமம் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தலைமையில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐம்பது லட்சம் போயர் சமுதாய மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் கரூர் காந்திகிராமம் உள்ள அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும், திமுக ஆட்சிக்கால பொறுப்பேற்ற பிறகு கட்டுமான போயர் மக்கள் சமுதாயத்தைச் சார்ந்தவர் தொழிலாளர் நல வாரிய தலைவராக பதவியை வழங்கவில்லை, போயர் சமுதாய மக்கள் பிரதிநிதிக்கு அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கல்குவாரிய தொழிலாளர் நல வாரியத்திலும் எங்கள் போயர் சமுதாய மக்கள் பிரதிநிதிக்கு வாரிய தலைவர் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் அனைத்து சாதியினருக்கும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான இட ஒதுக்கீடு செய்த அரசு தாமதிக்காமல் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
தமிழகத்தில் வீட்டிற்கு ஒரு இளைஞருக்கு அரசு வேலை கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வீட்டிற்கு ஒரு இளைஞருக்கு அரசு வேலை கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் .
என்றும் தமிழக அரசுக்கு உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்போம் எனவும், எங்கள் கோரிக்கை ஏற்காத திமுக அரசை கண்டித்து வருகின்ற நாட்கள் மாவட்டம் தோறும் தேர்தல் அடையாள அட்டை அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள் . மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தித்து வாக்காளர் அடையாள அட்டைகளை திருப்பி கொடுக்க உள்ளோம் என தெரிவித்தனர்.