மேலும் அறிய

KT Raghavan Video: கே.டி ராகவனுக்கு ஆதரவா? சீமானை வெளுத்து வாங்கும் ஜோதிமணி எம்.பி

தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு

தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. சீமான், கே.டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார். 

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,   

"பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை,சுரண்டலை கேள்வி கேட்கும் சமூகம் சரியாகத்தான் இருக்கிறது. பாஜக ராகவனின் குற்றத்தை,சுரண்டலை சிறிதும் வெட்கம் இல்லாமல் அப்பட்டமாக ஆதரிக்கும்  சீமானின் செயல்பாடுதான் வெட்கக்கேடானது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர் இவர். இப்படிப் பொறுப்பில்லாமல், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, சுரண்டலை ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் கள்ளமில்லாத இளைஞர்களின் மனதில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சரியென்ற மனநிலையை சீமான் உருவாக்குகிறார். இது ஒட்டுமொத்த பெண்களுக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆபத்தாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. பாஜசுவிடமிருந்து மட்டுமல்ல இப்படிப்பட்ட ஆபாசமான, அறுவெறுக்கத்தக்க ஆபத்தான செயல்பாடுகளை ஆதரிக்கும் சீமான் போன்றவர்களிடமும் பெண்களும், தமிழ்சமூகமும் விழிப்புடன் இருக்கவேண்டும். இவர்கள் எல்லாம் பெண்களின் பாதுகாப்பு, மரியாதை,கண்ணியம் பற்றி துளிகூட கவலைப்படாதவர்கள்,பெண்களை பாலியல்ரீதியான வன்முறைக்கு. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்குவதை ஆதரிப்பவர்கள்.

காலம் காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குற்றங்கள்,ஒடுக்குமுறைகள், சுரண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்காக அவையெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? பாலியல் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?. எப்படி காலங்காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடக்கின்றனவோ அதேபோல அதற்கு எதிரான போராட்டங்களும் நடந்து கொண்டுதானிருக்கிறன என்பதை சீமான் நினைவில் கொள்ளவேண்டும். 

அந்த போராட்டங்களின் பயனாகவே இன்று பெண்கள் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வெற்றிகரமான பங்களிப்பை செலுத்தி வருகிறார்கள். பல்வேறு உளவியல், சமூக, பொருளாதாரத் தடைகளைத்தாண்டி பொது வாழ்விற்கு வரும் பெண்கள் கண்ணியத்துடனும், மரியாதையுடனும்,பாதுகாப்புடனும் நடத்தப்படவேண்டும். அப்படியில்லாமல் பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். தண்டிக்கப்பட வண்டும். இதுதான் ஒரு நாகரிகமான சமூகத்தின் கடமை. அந்த கடமையைத் தான் தமிழ்சமூகம் சரிவர செய்துவருகிறது

பெண்களிடம் முறைகேடாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அவர்களை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் தமிழ் சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது இதுதான் சீமான் போன்றவர்களுக்கு உறுத்துகிறது. 

சீமான் மீதும் கடந்த காலத்தில் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது குற்றத்தை மறைக்கவே சீமான் ராகவனின் பாலியல் குற்றத்தை வெளிப்படையாக ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. மேலும் சீமான் பாஜகவின் B Team என்பதை மீண்டும்  ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படியிருந்தாலும் சீமானின் இந்த செயல் வெட்கக்கேடானது. சீமான், கே.டி. ராகவன் போன்றவர்களின் வளர்ச்சி தமிழ்நாட்டு பெண்களுக்கு பேராபத்தை விளைவிக்கும். தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் எதிர்காலமான இளைஞர்களும்,மாணவர்களும் இப்போதாவது சீமானின் பொய் முகத்தைப் புரிந்து கொண்டு அவரைப் புறக்கணிக்க வேண்டும். அதுவே நாம் தமிழ்ச் சமூகத்திற்கு செய்யும் பெருந்தொண்டு", 

இவ்வாறு,ஜோதிமணி எம்.பி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK Survey :  ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
ADMK Survey : ”எடப்பாடியின் ரகசிய சர்வே – ஜெயிக்கிறவங்களுக்குதான் சீட்” பின்னணியில் Ex. உளவுத்துறை..!
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
Embed widget