கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை, 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 266 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
![கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு Karur Mayanur Kathavanai Water inflow to decreased TNN கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/479faff1242f2c6c4f3900aad5fd69ea1682747012882183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 384 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்கால்களிலும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை நிலவரம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை, 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 266 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இதனால், அமராவதி ஆறு, புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 55.94 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம் வடக்காடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால் நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 34.09 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், கா. பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6 மணி நிலவரப்படி அனைக்கு, தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 13.12 அடியாக இருந்ததால், நொய்யில் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)