கரூர் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 636 கனஅடியாக இருந்தது. நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 209 கன அடியாக குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்காக, காவிரியாற்றில் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால், தென்கரை வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 231 கனஅடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 500 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 440 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. 90 அடி கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம், 59.52 அடியாக இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து, இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நாங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 27.55 அடியாக உள்ளது.நாங்காஞ்சி ஆற்றில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.