கரூர்: மாயனூர் கதவணையில் தண்ணீர் வரத்து தொடர்ந்து சரிவு - விவசாயிகள் கவலை
மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து, 23 கன அடி வரை தண்ணீர் வந்தது. பின் படியாக குறைந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 33 ஆயிரத்து, 532 கன அடி தண்ணீர் வந்தது.
கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து, 23 கன அடி வரை தண்ணீர் வந்தது. பின் படியாக குறைந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 33 ஆயிரத்து, 532 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனக்குருவை சாகுபடிக்கு, காவிரி ஆற்றில் 14 ஆயிரத்து, 980 கன அடி தண்ணீரும், நான்கு பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.
நங்காஞ்சி அணை, திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.99 அடியாக உள்ளது. நங்கஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை, திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,195 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றில் வினாடிக்கு, 800 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில், 400 கன அடியும் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம், 88.49 அடியாக இருந்தது. அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு, நேற்று வினாடிக்கு 185 கன அடி தண்ணீர் வந்தது.
ஆத்துப்பாளையம் அணை, கரூர் மாவட்டம், கா.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 16.30 அடியாக இருந்ததால் நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்திருந்தது. தற்போது உள்ள நிலையில் மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து படிப்படியாக சரிந்து கொண்டே வருகிறது. இதனால் பாசன விவசாயிகள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்